For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின், ரோஹித் சந்தேகம் தான்.. ஜடேஜாவுக்கும் காயம்.. அடுத்த டெஸ்ட்டும் போச்சா?

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முக்கிய இந்திய வீரர்கள் அஸ்வின், ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது.

ஏற்கனவே, இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி அடைய அணித் தேர்வே காரணம் என கூறப்பட்ட நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கும் அணித் தேர்வில் சிக்கல் எழுந்துள்ளது.

2வது டெஸ்ட் தோல்விக்கு காரணம்

2வது டெஸ்ட் தோல்விக்கு காரணம்

முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் அஸ்வின், ரோஹித் சர்மா காயமடைந்தனர். அதனால் அவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்டில் ஆடவில்லை. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி முழு நேர சுழற் பந்துவீச்சாளர் இல்லாமல் சென்று தோல்வி அடைந்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஏன் ஜடேஜாவை இரண்டாவது டெஸ்டுக்கான அணியில் சேர்க்கவில்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேட்ட போது அவருக்கும் காயம் என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் ரசிகர்கள். ஜடேஜா, அஸ்வின், ரோஹித் சர்மா மூவருமே காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜடேஜா 80% குணம்

ஜடேஜா 80% குணம்

எனினும், இவர்களில் யார் யார் மூன்றாவது டெஸ்டில் ஆடுவார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ரவி சாஸ்திரி குறிப்பிடுகையில் ஜடேஜாவின் காயம் 70-80 சதவீதம் குணமாகி விட்டதாக குறிப்பிட்டார். 80 சதவீதம் குணமானாலும் அடுத்த போட்டியில் ஜடேஜா ஆடுவார் என குறிப்பிட்டார். இதுவும் உறுதியாகவில்லை.

அஸ்வினுக்கு 48 மணி நேர கெடு

அஸ்வினுக்கு 48 மணி நேர கெடு

அஸ்வினை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் அவரை கண்காணித்த பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என கூறினார். அஸ்வினுக்கு மாற்றாக ஜடேஜா இருப்பார் என்பதால் இவர்கள் இருவரில் ஒருவராவது மூன்றாவது டெஸ்டுக்கு முன் குணமாக வேண்டும்.

ரோஹித் இடம் சந்தேகம்

ரோஹித் இடம் சந்தேகம்

ரோஹித் சர்மா நன்றாக குணமடைந்து இருக்கிறார். எனினும், இன்னும் ஒருநாள் கழித்து தான் முடிவுக்கு வர வேண்டும் என கூறினார் ரவி சாஸ்திரி. அதே சமயம், அணிக்குள் பாதி தொடரில் நுழைந்துள்ள ஹர்திக் பண்டியாவுக்கு இடம் அளித்தால், ரோஹித் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோருக்கு இடம் அளிப்பதில் சிக்கல் எழும்.

அணியில் குழப்பம்

அணியில் குழப்பம்

இந்திய அணி எந்த 11 வீரர்களைக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் ஆடப் போகிறோம் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டை வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும்.

Story first published: Monday, December 24, 2018, 13:28 [IST]
Other articles published on Dec 24, 2018
English summary
India vs Australia : Ashwin and Rohit not sure for Melbourne test says Ravi Shastri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X