For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் நல்லா இல்லை அஸ்வின்.. உங்க மதிப்பை கெடுத்துக்காதீங்க! வருத்தப்படும் கங்குலி

கொல்கத்தா: முன்னாள் இந்திய வீரர் கங்குலி, அஸ்வினுக்கு அடிக்கடி ஏற்படும் காயங்கள் அவரது தகுதியை பாதிப்பதாக கருத்து கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆடிய அஸ்வின், காயம் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை. அதையடுத்து, கங்குலி அஸ்வினின் உடற்தகுதி குறித்து பேசியுள்ளார்.

அடிக்கடி காயம்

அடிக்கடி காயம்

இது பற்றி கங்குலி கூறுகையில், "அஸ்வின் என்னை மிகவும் கவலை அடைய வைக்கிறார். இந்தியாவின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்து கொண்டு, இங்கிலாந்து, தென்னாபிரிக்க, தற்போது ஆஸ்திரேலியா என பெரிய தொடர்களின் போது அடிக்கடி காயமடையக் கூடாது" என தெரிவித்தார்.

மதிப்பை கெடுத்துக் கொள்கிறார்

மதிப்பை கெடுத்துக் கொள்கிறார்

அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் கெட்டி என பெயரெடுத்தவர். எதிரணியின் இடது கை பேட்ஸ்மேன்களை சமாளிக்க அவர் தேவை எனும் நிலையில் அவர் தன் மதிப்பிற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அவர் அடிக்கடி காயத்தில் இருப்பதை சுட்டிக் காட்டினார் கங்குலி.

டெஸ்ட் மட்டுமே ஆடும் அஸ்வின்

டெஸ்ட் மட்டுமே ஆடும் அஸ்வின்

அஸ்வின் கடந்த சில மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணியில் அவரை சேர்ப்பதில்லை. டெஸ்டில் முன்னணி பந்து வீச்சாளராக இருந்தும் அவரது காயம் காரணமாக தன் இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளார் அஸ்வின்.

342 விக்கெட்கள் எடுத்துள்ள அஸ்வின்

342 விக்கெட்கள் எடுத்துள்ள அஸ்வின்

அஸ்வின் 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 342 விக்கெட்கள் எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கூட 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Story first published: Wednesday, December 26, 2018, 17:10 [IST]
Other articles published on Dec 26, 2018
English summary
India vs Australia : Ashwin’s injuries during overseas tours are worrying me says Ganguly
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X