For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் ஓபனிங் பண்ணலாமே.. ஐடியா சொன்ன சசி தரூர்! பேசாம நீங்களே ஓபனிங் பண்ணுங்களேன்

டெல்லி : காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரான சசி தரூர் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் யாரை துவக்க வீரராக களம் இறக்கலாம் என்பது பற்றி தன் கருத்தை கூறி ட்விட்டரில் வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் - முரளி விஜய் இணை சரியாக ரன் குவிப்பதில்லை என்பதே இந்திய அணியின் துவக்க வீரர்கள் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

ப்ரித்வி ஷா காயம்

ப்ரித்வி ஷா காயம்

ப்ரித்வி ஷா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என கூறிய நிலையில் அவர் காயத்தால் தொடரில் இருந்தே விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

துவக்கம் யார்?

துவக்கம் யார்?

அடுத்த போட்டியில் முரளி விஜய் - மாயங்க் துவக்கம் அளிப்பார்கள் என்றும், ரோஹித் அல்லது ஹனுமா விஹாரியுடன் முரளி விஜய் அல்லது மாயங்க் துவக்கம் அளிப்பார்கள் என்றும் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.

சசி தரூர் சொன்ன யோசனை

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் தன் பங்கிற்கு ஒரு யோசனை கூறினார். அதில் அஸ்வின், மாயங்க் அகர்வால் துவக்கம் அளித்தால் மிடில் ஆர்டரில் கூடுதல் பேட்ஸ்மேன் களம் இறங்கலாம் என அதிரடி யோசனை ஒன்றை கூறினார். இது போல ஏற்கனவே சில அணிகள் முயற்சி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நல்ல யோசனை தான்

நல்ல யோசனை தான்

குறிப்பாக இந்திய அணியிலேயே சேவாக், ரோஹித் சர்மா ஆகியோர் ஆரம்ப காலங்களில் ஆறாவது இடத்தில் தான் பேட்டிங் செய்து வந்தார்கள். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் கூட பின் வரிசையில் தான் முதலில் பேட்டிங் செய்து வந்தார். அந்த காலங்களில் அவர்கள் யாருமே பெரிதாக ரன் அடித்ததில்லை. ஆனால், துவக்க வீரராக களம் இறக்கிய போது தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டனர்.

அஸ்வின் துவக்கம் அளித்துள்ளார்

அஸ்வின் துவக்கம் அளித்துள்ளார்

அதே போல அஸ்வின் தமிழ்நாடு அணிக்கு ஆடும் போது துவக்க வீரராக ஆடியுள்ளார். பேட்டிங்கில் ஓரளவு அடிப்படை திறன் உள்ளது. அதனால், சசி தரூர் இப்படி கூறியுள்ளார் என சிலர் இதை மாற்று யோசனையாக எடுத்துக் கொண்டனர்.

வைத்து செய்த ரசிகர்கள்

ஆனால், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் "இன்னைக்கு சசி தரூர் சிக்கிட்டார்" என்ற மனநிலையில் அவரை ட்விட்டரில் "வைத்து செய்து" வருகிறார்கள். ஒருவர், "நல்லவேளை, விராட் கோலி பந்துவீச்சை ஓபனிங் பண்ணனும்னு சொல்லலை" என கூறி கலாய்த்துள்ளார்.

பயிற்சியாளரா இருங்க

இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளரா தான் இருக்கணும் என கேலி செய்கிறார்.

இனி ரவி சாஸ்திரி வேண்டாம்

இன்னும் ஏன் ரவி சாஸ்திரியை வச்சுருக்கீங்க.. அவரை விட சசி தரூர் நல்ல ஆள் என கலாய்த்துள்ளார் இவர்.

நீங்களே ஓபனிங் பண்ணுங்களேன்

சசி தரூர் பேட்டிங் செய்யும் படத்தை போட்டு, பேசாம நீங்களே ஓபனிங் பண்ணுங்களேன் என்று கூறி கிண்டல் அடித்துள்ளார் இவர்.

Story first published: Saturday, December 22, 2018, 11:28 [IST]
Other articles published on Dec 22, 2018
English summary
India vs Australia : Ashwin should open the batting in test matches says Shashi Tharoor
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X