
டாஸ்
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. டாஸ் தோல்வி அடைந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக அமைந்தது.

மேலும்
கோலி இந்திய அணியில் இடம்பெறாத நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் ஷமி நீக்கப்பட்டுள்ளார். இன்று நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஜடேஜா, பண்ட், ஹனுமா விஹாரி, அஷ்வின், பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி
இன்று விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், ஜோபர்ன்ஸ் , மார்னஸ், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெயின், பேட் கும்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லைன், ஜோஷ் ஹஸல்வுட் ஆகியோர் ஆட உள்ளனர்.

மோசம்
இந்த மைதானம் புல் தரையாக இருப்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமான சூழ்நிலை இருந்தது. இந்த நிலையில்தான் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மோசமாக சொதப்ப போகிறது என்றுதான் பலரும் கணித்தனர்.

கணிப்பு
ஆனால் கணிப்புகளை மீறி இந்திய அணி மிகவும் சிறப்பாக பந்து வீசியது. முக்கியமாக இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, அறிமுக வீரர் சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். பின் மேலும் ஒரு விக்கெட் எடுத்தார்.

பும்ரா
ஆனால் கணிப்புகளை மீறி இந்திய அணி மிகவும் சிறப்பாக பந்து வீசியது. முக்கியமாக இந்திய அணியின் அஸ்வின், பும்ரா, அறிமுக வீரர் சிராஜ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடக்கத்திலேயே அஸ்வின் 2 விக்கெட் எடுத்தார். பின் மேலும் ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்தியா
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார். ஆனால் அதன்பின் புஜாரா, சுப்மான் கில் ஆகியோர் நிதானமாக ஆடினார்கள். இதையடுத்து இந்தியா 11 ஓவருக்கு 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.


Click it and Unblock the Notifications











