ஆஸி.யை வீழ்த்திய இந்தியா.. பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றுள்ளது.

நட்டுவிடம் முதலில் கோப்பையை கொடுத்த ரஹானே... வாழ்த்து மழையில் இந்திய அணி!

இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் தொடர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தக்க வைத்துள்ளது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை தி கப்பா மைதானத்தில் 33 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி இன்று திருத்தி எழுதி உள்ளது. இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

01:11 pm

Ind vs Aus: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா. நான்காவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி. 33 வருடமாக கப்பா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸி.யின் சாதனை முறியடிப்பு.

11:56 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை நெருங்கி வருகிறது. மயங்க் அகர்வால் 4, பான்ட் 39 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 87 ரன்கள் தேவை.

11:11 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அதிரடி ஆட்டம். புஜாரா 47, பான்ட் 28 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 119 ரன்கள் தேவை.

09:58 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில், ரஹானே, ரோஹித் அவுட். புஜாரா 43, பான்ட் 2 ரன்களுடன் ஆடி வருகிறார்கள். இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 153 ரன்கள் தேவை.

09:06 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில் 91 ரன்னிற்கு அவுட். சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை தவறவிட்டார் கில். புஜாரா 26 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 196 ரன்கள் தேவை.

08:32 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சுப்மான் கில் அதிரடி பேட்டிங். 72 ரன்கள் எடுத்து சுப்மான் கில் களத்தில் உள்ளார். புஜாரா 11 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 233 ரன்கள் தேவை.

11:55 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ஆஸி. 294 ரன்னிற்கு ஆல் அவுட். இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

11:06 am

Ind vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் மழைக்கு பின் மீண்டும் தொடங்கியது. ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 280 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

10:42 am

Ind vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியா இதுவரை 7 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 276 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

09:38 am

Ind vs Aus: ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறல். ஆஸ்திரேலியா 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 260 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

08:35 am

Ind vs Aus: ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்மித் - கிரீன் நிதானமான ஆட்டம். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 195 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

07:50 am

Ind vs Aus: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. சிராஜ் வீசிய ஒரே ஓவரில் மார்னஸ், மேத்யூ வேட் அடுத்தடுத்து அவுட். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 182 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

01:19 pm

Ind vs Aus: மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா கூடுதலாக 54 ரன்கள் எடுத்துள்ளது.

12:34 pm

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 336 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலியா கூடுதலாக 33 ரன்கள் எடுத்துள்ளது.

11:47 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிரடியாக ஆடி வந்த ஷரத்துல் அவுட். 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷரத்துல் அவுட். வாஷிங்க்டன் சுந்தர் 54 ரன்கள் எடுத்து களத்தில் ஆடி வருகிறார். இந்திய அணி 7 விக்கெட்டிற்கு 309 ரன்கள் எடுத்துள்ளது.

11:13 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷரத்துல் - சுந்தர் அடுத்தடுத்து அரைசதம். வாஷிங்க்டன் சுந்தர் 50, ஷரத்துல் தாக்கூர் 54 ரன்கள் எடுத்து அதிரடி. இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 290 ரன்கள் எடுத்துள்ளது.

11:05 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் - ஷரத்துல் பார்ட்னர்ஷிப் அதிரடி ஆட்டம். வாஷிங்க்டன் சுந்தர் 45, ஷரத்துல் தாக்கூர் 47 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.

09:49 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சுந்தர் - ஷரத்துல் அதிரடி ஆட்டம். வாஷிங்க்டன் சுந்தர் 31, ஷரத்துல் தாக்கூர் 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

09:00 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 விக்கெட்டை இழந்து இந்திய அணி திணறல். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான காரணத்தால் இக்கட்டான நிலையில் இந்திய அணி.

08:25 am

Ind vs Aus: 4வது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி திணறல். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது. இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

09:21 am

ரோஹித் சர்மா, புஜாரா பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

09:21 am

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 369 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஷுப்மன் கில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

01:10 pm

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. அணி 5 விக்கெட்டை இழந்து 274 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின் 38, கிரீன் 28 ரன்கள் எடுத்துள்ளனர். நான்காவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

12:15 pm

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. அணி 5 விக்கெட்டை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின் 8, கிரீன் 19 ரன்கள் எடுத்துள்ளனர்.

11:20 am

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் நடராஜன் விக்கெட் எடுத்து அசத்தல். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் முதல் விக்கெட். 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நடராஜன் பவுலிங்கில் மேத்யூ வேட் அவுட்.

11:19 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸி. வீரர் மார்னஸ் சதம் அடித்து அசத்தல். ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 101 ரன்கள் எடுத்துள்ளார்.

10:49 am

Ind vs Aus: 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 83, வேட் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

10:49 am

Ind vs Aus: 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 83, வேட் 31 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

09:30 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா நிதானமான பேட்டிங். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் 45, வேட் 11 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

08:50 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிராக மூன்றாவது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் அவுட். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

07:27 am

Ind vs Aus: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 29, மார்னஸ் 19 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

12:01 pm

அஸ்வின் 33, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். விஹாரி 111 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் எடுத்து போராட்டம். இந்தியா வெற்றி பெற இன்னும் 93 ரன்கள் தேவை. மூன்றாவது டெஸ்ட் முடிய இன்னும் 11 ஓவர்களே உள்ளது

11:32 am

அஸ்வின் 24, விஹாரி 7 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். விஹாரி 111 பந்துகள் பிடித்து 7 ரன்கள் எடுத்து போராட்டம். இரண்டு முக்கிய வீரர்களும் காயத்தோடு போராடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 301 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 106 ரன்கள் தேவை. மூன்றாவது டெஸ்ட் முடிய இன்னும் 16 ஓவர்களே உள்ளது

10:54 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்ய இந்திய அணி போராட்டம். அஸ்வின் 15, விஹாரி 6 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 291 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 116 ரன்கள் தேவை.

09:08 am
Mykhel

புஜாரா 77, விஹாரி 3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள். பண்ட் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட். 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 272 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை .

08:25 am

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா அதிரடியாக ஆடி வருகிறது. ரிஷாப் பண்ட் 97 ரன்கள், புஜாரா 57 ரன்கள் எடுத்து அதிரடி. 3 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 250 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் தேவை.

12:39 pm

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா இரண்டு விக்கெட்டை இழந்த 98 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 309 ரன்கள் தேவை.

11:51 am

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட். 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 71 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 336 ரன்கள் தேவை.

11:18 am

Ind vs Aus: 2வது இன்னிங்சில் இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 40 ரன்கள் எடுத்துள்ளது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர்.

09:54 am

Ind vs Aus: 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர். இந்தியாவை விட ஆஸ்திரேலியா 406 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. இந்தியாவிற்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

08:53 am

Ind vs Aus: 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 354 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

08:21 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆஸி. நிதானம். 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 220 ரன்கள் எடுத்துள்ளது.

02:08 pm

ஸ்மித் 29, லாபுஷாக்னே 49 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 103 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

01:17 pm

ஆஸ்திரேலியா 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு 3௦௦ ரன்களுக்கும் மேல் வெற்றி இலக்கு நிர்ணயிக்க ஆஸ்திரேலியா முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01:17 pm

ஸ்மித் 29, லாபுஷாக்னே 49 ரன்கள் குவித்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 103 ரன்களுக்கு ௨௧ விக்கெட்கள் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

11:22 am

வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ஆஸ்திரேலியா 35 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

10:42 am

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் வில் புகோவ்ஸ்கி 10 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

10:32 am

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்யத் துவங்கியது. டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி பேட்டிங் செய்து வருகின்றனர்.

10:06 am

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

10:06 am

ஜடேஜா 28 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

10:06 am

கம்மின்ஸ் பந்துவீச்சில் முகமது சிராஜ் ஆட்டமிழந்தார். இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

09:45 am

பும்ரா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். ஜடேஜா, சிராஜ் களத்தில் ஆடி வருகின்றனர். ஜடேஜா ரன் குவிக்க போராடி வருகிறார்.

09:13 am

இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 210 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா 128 ரன்கள் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

09:13 am

நவ்தீப் சைனி 4 ரன்களை எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

09:02 am

விஹாரி 4, அஸ்வின் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 206 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது.

09:02 am

மூன்றாம் நாள் ஆட்டத்தில் புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ரஹானே 22, ரிஷப் பண்ட் 36 ரன்கள் எடுத்தனர்.

01:03 pm

Ind vs Aus: இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 96 ரன்கள் எடுத்துள்ளது. 45 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 96 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 5, புஜாரா 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

12:16 pm

Ind vs Aus: முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 33 ஓவர்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 86 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 26 ரன்களுக்கு அவுட். அரை சதம் எடுத்திருந்த நிலையில் சுப்மான் கில்லும் அவுட்.

11:56 am

Ind vs Aus: முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தது இந்திய அணி. 29 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 81 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 26 ரன்களுக்கு அவுட்.

11:34 am

Ind vs Aus: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 24 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி இந்தியா 61 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24, சுப்மான் கில் 31 ரன்கள் எடுத்துள்ளனர்.

10:23 am

Ind vs Aus: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. 9 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி இந்தியா 26 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 11, சுப்மான் கில் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.

09:22 am

Ind vs Aus: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களுக்கு ஆல் அவுட். 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் ரன் அவுட். ஜடேஜா ரன் அவுட் உட்பட 5 விக்கெட் எடுத்து அசத்தல்.

09:05 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தல். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது.

08:44 am

Ind vs Aus: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஸ்மித் சதம். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 292 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 102, ஸ்டார்க் 10 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

08:28 am

Ind vs Aus: 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டை இழந்து 278 ரன்கள் எடுத்துள்ளது.

07:44 am

Ind vs Aus: உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.

07:04 am

Ind vs Aus: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 76 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.

12:13 pm

Ind vs Aus: ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 2 விக்கெட்டை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது.

11:29 am

இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரர் வில் புக்கோவஸ்கி அரை சதம் அடித்துள்ளார்.

11:29 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் மீண்டும் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியா அணி அதிரடியாக ஆடி வரும் நிலையில் மழை.

11:08 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஆஸி.யின் புக்கோவஸ்கி - மார்னஸ் அதிரடி. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.

10:08 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக ஆஸி 1 விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது.

09:36 am

Ind vs Aus: மூன்றாவது டெஸ்ட் போட்டி மழைக்கு பின் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

09:23 am

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்து வென்றது.

09:23 am

Ind vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா அதிரடி வெற்றி. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா 200 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

08:49 am

2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 32 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற 39 ரன்கள் தேவை.

08:48 am

Ind vs Aus: 2வது டெஸ்டில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்து இந்தியா அதிர்ச்சி. மயங்க் அகர்வால் 3 மற்றும் புஜாரா 5 ரன்களுக்கு அவுட்.

08:28 am

Ind vs Aus: 2வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற 57 ரன்கள் தேவை. 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 200 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

07:02 am

Ind vs Aus: 2வது டெஸ்டில் ஆஸி. இந்தியாவை விட 59 ரன்கள் முன்னிலை. 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு ஆஸி.190 ரன்கள் எடுத்துள்ளது.

06:34 am

Ind vs Aus: 2வது டெஸ்டில் ஆஸி. இந்தியாவை விட 41 ரன்கள் முன்னிலை. 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸி.171 ரன்கள் எடுத்துள்ளது.

12:55 pm

ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கையில் 4 விக்கெட்கள் இருக்கும் நிலையில், 2 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 100 ரன்கள் சேர்க்கும் முன் இந்தியா கடைசி 4 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

12:50 pm

ஆஸ்திரேலிய அணி கூடுதலாக 100 ரன்கள் சேர்க்கும் முன் இந்தியா கடைசி 4 விக்கெட்களை வீழ்த்தினால், இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது.

12:50 pm

ஆஸ்திரேலிய அணி கையில் 4 விக்கெட்கள் இருக்கும் நிலையில், 2 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

12:50 pm

ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

11:33 am

டிராவிஸ் ஹெட் 17 ரன்களில் சிராஜ் பந்துவீச்சிலும், டிம் பெயின் 1 ரன் எடுத்து ஜடேஜா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது.

11:14 am

ஜடேஜா பந்துவீச்சில் மேத்யூ வேட் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 98 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது.

10:21 am

ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

09:50 am

ஆஸ்திரேலிய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

09:50 am

லாபுஷாக்னே 28 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

08:45 am

உமேஷ் யாதவ் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறி உள்ளார்.

08:44 am

ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட், மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்து வருகின்றனர்.

08:29 am

இந்திய அணி 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது.

08:29 am

ஆஸ்திரேலிய அணி தன் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது.

12:35 pm

IND vs Aus: ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் மழையால் பாதிப்பு. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 277 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 82 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது

12:10 pm

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து அசத்திய ரஹானே. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 268 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 73 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 100 ரன்கள் எடுத்து அதிரடி.

11:58 am

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிரடி காட்டும் ரஹானே. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 258 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 63 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 90 ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கி வருகிறார்.

11:23 am

IND vs Aus: பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடி காட்டும் ரஹானே - ஜடேஜா. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 217 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எடுத்த 195 ரன்களை இந்தியா கடந்தது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 22 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. கேப்டன் ரஹானே 71 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார். ஜடேஜா 14 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

10:30 am

IND vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 198 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் எடுத்த 195 ரன்களை இந்தியா கடந்தது. கேப்டன் ரஹானே 57 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார்.

09:46 am

IND vs Aus: 5 விக்கெட்டை இந்தியா இழந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிப்பு. சாரல் மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிப்பு. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 189 ரன்கள் எடுத்துள்ளது.

09:23 am

IND vs Aus: 5 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷாப் பண்ட் அவுட். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 விக்கெட்டை இழந்து இந்தியா 171 ரன்கள் எடுத்துள்ளது.

08:54 am

IND vs Aus: 4 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹனுமா விஹாரி அவுட். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 விக்கெட்டை இழந்து இந்தியா 153 ரன்கள் எடுத்துள்ளது.

08:11 am

IND vs Aus: இந்தியா அணியின் ரஹானே, விஹாரி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட்டை இழந்து இந்தியா 110 ரன்கள் எடுத்துள்ளது.

07:08 am

IND vs Aus: இந்தியா நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3 விக்கெட்டை இழந்து இந்தியா 90 ரன்கள் எடுத்துள்ளது.

06:42 am

IND vs Aus: 3 விக்கெட்டை இழந்து இந்தியா திணறல். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மீண்டும் திணறல். மயங்க் அகர்வால், புஜாரா, சுப்மான் கில் அடுத்தடுத்து அவுட். இந்தியாவின் ரஹானே 2, ஹனுமா விஹாரி 12 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

12:40 pm

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இந்தியா 11 ஓவருக்கு 1 விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 28, புஜாரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

12:39 pm

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவிற்கு வந்தது

11:54 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட் ஆனார்.

11:32 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 195 ரன்னிற்கு சுருண்டது. 195 ரன்னிற்கு ஆஸ்திரேலியாவின் 10 விக்கெட்டையும் வீழ்த்தியது இந்தியா. பும்ரா 4, அஸ்வின் 3, சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட்டை எடுத்தனர்.

11:21 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 70 ஓவரில் 177/8. இந்தியாவிற்கு எதிராக 8வது விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலியா திணறல். பும்ரா ஓவரில் மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுக்கு அவுட்.

11:00 am

IND vs Aus: மொத்தமாக 7 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா திணறல். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 1, கும்மின்ஸ் 1 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

10:52 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 156/7. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டை பறிகொடுத்து ஆஸ்திரேலியா திணறல். அஸ்வின் ஓவரில் டிம் பெயின் 13 ரன்களுக்கு அவுட். சிராஜ் ஓவரில் கேமரூன் கிரீன் 12 ரன்களுக்கு அவுட் .

09:53 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 136/5. ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் 6, டிம் பெயின் 0 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.

09:32 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்து திணறல். சிராஜ் வீசிய 50வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் அவுட். 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாரன்ஸ் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது.

09:09 am
09:09 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து திணறல். பும்ராவின் 42வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹெட் அவுட்.

09:09 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து திணறல். பும்ராவின் 42வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் ஹெட் அவுட்.

08:42 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானமான பார்ட்னர்ஷிப். ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஹெட் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து வருகிறார்கள். மார்னஸ் 38, ஹெட் 29 ரன்கள் எடுத்துள்ளனர் .

07:57 am

மார்னஸ் 29, ஹெட் 8 ரன்கள் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது.

07:56 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா நிதானம். 3 விக்கெட்டை இழந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ், ஹெட் நிதானம் .

07:27 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் ஆஸி. 65/3. உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.

06:58 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்தியா ஆதிக்கம். ஆஸ்திரேலியாவின் ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து அவுட். ஜோ பர்ன்ஸ், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் டக் அவுட்.

06:26 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா திணறல். அஸ்வின் பவுலிங்கில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி 38 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

06:26 am

இந்திய அணி பவுலிங் செய்து வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே பொறுப்பேற்பு.

06:26 am

IND vs Aus: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு.

01:30 pm

ஆஸ்திரேலிய அணி அதிரடி ஆட்டம் ஆடி 21 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. ஜோ பர்ன்ஸ் அரைசதம் அடித்து தன் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தார்.

01:30 pm

இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து இருந்தது.

01:30 pm

ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

01:22 pm

மேத்யூ வேட் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

01:22 pm

ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் சேர்த்தது. வெற்றிக்கு மிக அருகே சென்றுள்ளது.

11:19 am

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கியது. ஷமி காயம் காரணமாக பந்து வீச மாட்டார் என கூறப்படுகிறது.

11:15 am

ஆஸ்திரேலிய அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

11:15 am

இந்திய அணி 36 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது.

11:14 am

ஷமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியவில்லை. இதையடுத்து அவர் வெளியேறினார்.

10:44 am

சாஹா 4 ரன்கள் எடுத்த நிலையிலும், அஸ்வின் ரன்னே எடுக்காத நிலையிலும் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

10:43 am

இந்திய அணி 6 விக்கெட்களை இழந்த நிலையில் ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

10:13 am

விராட் கோலி 4 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 19 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது.

10:12 am

13வது ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் ஹேசல்வுட். இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது.

10:12 am

ஹேசல்வுட் பந்துவீச்சில் ரஹானே டக் அவுட் ஆனார். 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது இந்திய அணி.

10:06 am

12.1 ஓவரில் இந்திய அணி 15 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது. தற்போது 68 ரன்கள் மட்டுமே இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

10:06 am

இந்திய அணி 15 ரன்கள் எடுத்த நிலையில் வரிசையாக 3 விக்கெட்களை இழந்துள்ளது.

10:06 am

புஜாரா கம்மின்ஸ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

09:46 am

பும்ரா 2 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

09:36 am

முதல் டெஸ்ட் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால், பும்ரா பேட்டிங் செய்து வருகின்றனர்.

05:20 pm

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது. களத்தில் பும்ரா, மயங்க் அகர்வால் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு 300 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்க முயற்சி செய்யும்.

04:54 pm

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பும்ரா நைட் வாட்ச்மேன் பணியை செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

04:54 pm

ஆஸி. 191 ஆல்-அவுட்.. இந்தியா 2ஆம் இன்னிங்க்ஸ் ஆரம்பம்! இந்திய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது. ப்ரித்வி ஷா, மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர்.

04:30 pm

உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஹேசல்வுட் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயின் 73 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்தியா 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

04:30 pm

4 விக்கெட் அள்ளிய அஸ்வின்.. ஆஸி. திணறல்! நாதன் லியோன் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின், அத்துடன் இந்த டெஸ்டில் தன் 4வது விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

04:04 pm

மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

03:05 pm

லாபுஷாக்னே 47 ரன்களிலும், கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

03:05 pm

உமேஷ் யாதவ் 54வது ஓவரில் லாபுஷாக்னே மற்றும் பாட் கம்மின்ஸ் விக்கெட்களை கைப்பற்றினார்.

02:16 pm

ஆஸ்திரேலிய அணி 48 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய அணியைப் போலவே ஆஸ்திரேலிய அணியும் நிதான ஆட்டம் ஆடி வருகிறது.

02:16 pm

கேமரூன் கிரீன் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். கிரீன் 11 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

01:02 pm

ஸ்டீவ் ஸ்மித் 29 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

12:38 pm

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே பேட்டிங் செய்து வருகின்றனர். லாபுஷாக்னே கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை பும்ரா மற்றும் ப்ரித்வி ஷா நழுவ விட்டனர்.

11:31 am

ஜோ பர்ன்ஸ் 41 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 29 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

11:09 am

மேத்யூ வேட் 51 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

10:32 am

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் துவக்க வீரர்களாக ஆடி வருகின்றனர்.

09:58 am

அஸ்வினை தொடர்ந்து சாஹா 9, உமேஷ் யாதவ் 6, ஷமி 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதை அடுத்து முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

09:40 am

இரண்டாம் நாளின் முதல் ஓவரில் அஸ்வின் ஆட்டமிழந்தார். அவர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

09:31 am

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் துவனாக் உள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர உள்ளது. அஸ்வின், சாஹா களத்தில் உள்ளனர்.

05:20 pm

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. அஸ்வின் 15, சாஹா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருந்தது.

04:51 pm

ஹனுமா விஹாரி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

04:36 pm

அஜின்க்யா ரஹானே 42 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

04:24 pm

இந்திய அணி 80 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே 42, ஹனுமா விஹாரி 4 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

04:19 pm

74 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ரன் அவுட் செய்யப்பட்டார். ரஹானே எடுத்த தவறான முடிவால் கோலி தன் விக்கெட்டை இழந்தார்.

03:53 pm

விராட் கோலி 67, ரஹானே 27 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய அணி 73 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 3 விக்கேகள் இழந்து ஆடி வருகிறது.

03:02 pm

விராட் கோலி அரைசதம் கடந்தார். 123 பந்துகளில் கோலி அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.

02:22 pm

55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 2 ரன்களும், கோலி 39 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

02:16 pm

புஜாரா 43 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லியான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

01:16 pm

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 71 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து ஆடி வருகிறது. புஜாரா 28, கோலி 21 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இருவரும் நிதான ஆட்டம் ஆடி வருகின்றனர்.

11:41 am

விராட் கோலி 22 பந்துகளில் 5 ரன்களும், புஜாரா 88 பந்துகளில் 17 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர்.

11:40 am

இந்திய அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து வருகிறது. 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்திய அணி.

11:06 am

18.1 ஓவரில் இந்திய அணி 32 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து உள்ளது. துவக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறது.

11:06 am

கம்மின்ஸ் பந்துவீச்சில் மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

11:06 am

புஜாரா, மயங்க் அகர்வால் நிதான ஆட்டம் ஆடி வருகின்றனர்.

09:45 am

ப்ரித்வி ஷா 2வது பந்திலேயே டக் அவுட் ஆனார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் அவர் மோசமான ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். ப்ரித்வி ஷாவைத் தொடர்ந்து புஜாரா, மயங்க் அகர்வால் பேட்டிங் செய்து வருகின்றனர்.

09:19 am

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

09:19 am

இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச உள்ளது.

09:14 am
Mykhel

Aus vs Ind : முதல் டெஸ்டில் இந்தியா டாஸ் வென்றது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச உள்ளது.

05:22 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி . இந்தியா 20 ஓவர் முடிவில் 174/7 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இந்தியாவை வீழ்த்தி ஆஸி. 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

05:09 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அதிரடி. இந்தியா 17 ஓவர் முடிவில் 144/4 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 79, பாண்டியா 20 ரன்கள் எடுத்துள்ளனர் .

04:52 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா. சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அடுத்தடுத்து அவுட். இந்தியா 14 ஓவர் முடிவில் 109/4 ரன்கள் எடுத்துள்ளது .

04:42 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அரைசதம். இந்தியா 8 ஓவர் முடிவில் 94/2 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 50, தவான் 10 ரன்கள் எடுத்துள்ளனர்.

04:41 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் கோலி அரைசதம். இந்தியா 8 ஓவர் முடிவில் 94/2 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 50, தவான் 10 ரன்கள் எடுத்துள்ளனர் .

04:26 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்தியா அதிரடி பேட்டிங். இந்தியா 8 ஓவர் முடிவில் 69/1 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 36, தவான் 27 ரன்கள் எடுத்துள்ளனர்.

03:54 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. முதல் ஓவரிலேயே இந்தியாவின் கே. எல் ராகுல் டக் அவுட் .

03:33 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிரான 3வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய 186/5 ரன்கள் எடுத்தது. இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 187 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

03:12 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 16 ஓவர் முடிவில் 145/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக மேக்ஸ்வெல் 37, மேத்யூ வேட் 73 ரன்கள் ஆடி வருகிறார்கள்.

02:48 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 12 ஓவர் முடிவில் 101/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக மேக்ஸ்வெல் 11, மேத்யூ வேட் 58 ரன்கள் ஆடி வருகிறார்கள்.

02:33 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 2வது விக்கெட்டை இழந்தது. 10 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 82/2 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் 23 ரன்களுக்கு அவுட் ஆனார்.

02:09 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா 5 ஓவர் முடிவில் 45/1 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக ஸ்மித் 6, மேத்யூ வேட் 32 ரன்கள் ஆடி வருகிறார்கள் .

01:53 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. 2 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 14/1 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஆரோன் பின்ச் டக் அவுட் ஆனார் .

01:49 pm

Ind Vs Aus: இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா அதிரடி தொடக்கம். ஒரு ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பாக ஆரோன் பின்ச், மேத்யூ வேட் ஆடி வருகிறார்கள் .

01:19 pm

Ind Vs Aus: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் செய்ய முடிவு.

05:21 pm

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரையும் 2 - 0 என கைப்பற்றியது.

05:19 pm

கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸ் அடித்து 19.4 ஓவரில் இந்திய அணியை வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.

05:11 pm

ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓவர்களில் 25 ரன்கள் தேவை.

05:11 pm

இந்திய அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 37 ரன்கள் தேவை

04:41 pm

தவான் அரைசதம் அடித்து 52 ரன்கள் குவித்த நிலையில் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.