Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: 2 மாற்றங்கள்.. உடல்தகுதியை நிரூபித்தாரா ட்ராவிஸ் ஹெட்? ஆஸ்திரேலியா பிளேயிங் XI அறிவிப்பு

மெல்போர்ன்: இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ட்ராவிஸ் ஹெட் உடல் தகுதியை நிரூபித்துவிட்டாரா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ind vs aus pat cummins sam konstas vs

ஏனென்றால் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்த போதும், அதனை பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் தவறவிட்டனர். இதன்பின் மழை காரணமாக ஆட்டம் டிராவில் முடிவடைதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இருப்பதால், மெல்போர்னில் வென்று ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கோன்ஸ்டாஸ் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 3 போட்டிகளிலும் நேதன் மெக்ஸ்வீனி விளையாடிய நிலையில், இந்த ஆட்டத்தில் 19 வயதாகும் இளம் வீரரான சாம் கோன்ஸ்டாஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளார்.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதால், அதே மேஜிக்கை பாக்ஸிங் டே டெஸ்டிலும் செய்வார் என்று பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சீனியர் வீரர்களான மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ட்ராவிஸ் ஹெட் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஏனென்றால் அவரின் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அவர் உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் பிளேயின் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் உடல் தகுதியை நிரூபித்துவிட்டது தெரிய வந்துள்ளது. அதேபோல் மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியின் போதே ஹேசல்வுட் காயம் காரணமாக விலகினார்.

இதனால் ஹேசல்வுட் இடத்திற்கு பிங்க் பால் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய போலண்ட் கொண்டு வரப்பட்டுள்ளார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்றாலும், ஆஸ்திரேலியா அணி ஒரேயொரு ஸ்பின்னருடன் களமிறங்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நேதன் லயன்.

Story first published: Wednesday, December 25, 2024, 8:24 [IST]
Other articles published on Dec 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+