Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் 2 போட்டியில் தோல்வி.. அடுத்த 3இல் வெற்றி.. ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது எப்படி?

டெல்லி : இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-2 என கைப்பற்றி அசத்தியுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த மூன்று போட்டிகளை தொடர்ந்து வென்று தொடரை தன் வசமாக்கியது.

நான்கு முறை

நான்கு முறை

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதற்கு முன் நான்கு முறை மட்டுமே இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, பின்னர் மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியது.

2005இல் இருமுறை

2005இல் இருமுறை

அதே போல, வங்கதேச அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராகவும் 2005இல் 0-2 என பின்தங்கி பின்னர் ஒருநாள் தொடர்களை வென்றனர். கடைசியாக 2016இல் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்துக்கு எதிராக இதே போன்ற ஒரு வெற்றியை பெற்றது.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

இந்த வரிசையில் ஐந்தாவதாக, இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரும் இடம் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் வெற்றிக்கு பின்னர், இந்தியா எளிதாக வெற்றி பெறும் என எண்ணிய நிலையில், அதை முறியடித்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

எப்படி வெற்றி பெற்றது?

எப்படி வெற்றி பெற்றது?

ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வி அடைந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் அந்த அணியின் பேட்டிங் சரியில்லை. எனினும், அடுத்த மூன்று போட்டிகளில், பேட்டிங்கில் கலக்கி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்று தொடரை வென்றது.

முதல் போட்டி

முதல் போட்டி

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 236 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டி

இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 250 ரன்கள் குவிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 242 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டி

மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 313 ரன்கள் குவித்தது. இந்தியா 281 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

நான்காவது போட்டி

நான்காவது போட்டி

நான்காவது போட்டியில் இந்தியா 358 ரன்கள் குவித்தது. இந்தியா எப்படியும் வெற்றி பெற்று விடும் என எண்ணிய நிலையில், ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

ஐந்தாவது போட்டி

ஐந்தாவது போட்டி

ஐந்தாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ஆஸ்திரேலியா 272 ரன்கள் குவித்தது. இந்தியா 237 ரன்கள் மட்டுமே குவிக்க, ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3-2 என கைப்பற்றியது.

Story first published: Thursday, March 14, 2019, 11:11 [IST]
Other articles published on Mar 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+