Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை வீழ்த்தியவர் நீக்கம்.. ஒரு மாற்றம் செய்த கம்மின்ஸ்.. ஆஸ்திரேலியா பிளேயிங் XI அறிவிப்பு

பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அடிலெய்டு போட்டியில் அசத்தலாக பவுலிங் செய்து விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹேசல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி சிறப்பாக தயாராகி வருகிறது. பெர்த் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தாலும், அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலியா அணி மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது.

ind vs aus border gavaskar trophy pat cummins

இதனால் அதே ஸ்டைலில் அடுத்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் நோக்கில் கேப்டன் பேட் கம்மின்ஸ் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் காபா மைதானத்தில் நாளை நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலியா அணி அறிவித்துள்ளது. கடந்த போட்டியில் ஆடிய ஸ்கார் போலண்ட் மட்டும் நீக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்தில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஹேசல்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 2வது டெஸ்ட் போட்டியில் போலண்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தலாக செயல்பட்ட போதும், அவர் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது. ஆனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஹேசல்வுட் 21 ஓவர்களில் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதுமட்டுமல்லாமல் காபா மைதானத்தில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேசல்வுட், இதுவரை இரு 5 விக்கெட்டுகள் சாதனை உட்பட மொத்தமாக 37 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் ஹேசல்வுட் கொண்டு வரப்பட்டிருப்பது சரியான மாற்றாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கம்மின்ஸ் பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆட்டம் எங்கள் கைகளில் இருந்து நழுவுவதை அறிந்தோம்.

இந்திய அணி சுமார் 400 ரன்கள் குவித்ததோடு, ஏராளமான விக்கெட்டுகளை கைகளில் வைத்திருந்தது. அப்போது ஹேசல்வுட் கொஞ்சம் சோர்வை உணர்ந்தார். ஏற்கனவே அப்படியான சூழல்களில் ஹேசல்வுட் காயமடைந்திருப்பதால், அவரை தொடர்ந்து பவுலிங் செய்ய வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அதனால் ஓய்வளித்தோம் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி மீண்டும் பெர்த் டெஸ்டில் ஆடிய பிளேயிங் லெவனுடன் களமிறங்கவுள்ளது. கவாஜா, மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்டோர் ஃபார்மில் இல்லையென்றாலும், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காபாவில் மூவரில் ஒருவர் ஃபார்முக்கு வர வாய்ப்புகள் உள்ளன.

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: நேதன் மெக்ஸ்வீனி, உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஹேசல்வுட், நேதன் லயன்

Story first published: Friday, December 13, 2024, 11:00 [IST]
Other articles published on Dec 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+