முதல் ஒருநாள் போட்டி: பண்டியா நீக்கம்.. மாற்று யார்? தினேஷ் கார்த்திக் - ஜாதவ்.. யாருக்கு இடம்?
சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் பண்டியா - ராகுல் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பதில் எந்த வீரர்களை களம் இறக்குவார்கள் என்ற குழப்பம் நிலவி வந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

இடைநீக்கம்
மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து பண்டியா - ராகுல் விலகியுள்ளனர். அவர்கள் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை பற்றி பேசிய சர்ச்சைப் பேச்சு காரணமாக விசாரணை முடியும் வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராகுல் - பண்டியா நிலை
ராகுல் ஏற்கனவே பார்ம் அவுட் என்ற அணியில் அணியில் களம் இறங்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதே சமயம், பண்டியா ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என்ற நிலை இருந்தது.

யார் களம் இறங்குவார்
பண்டியா இடை நீக்கத்தால் அணியில் யார் களம் இறங்குவார் என்ற கேள்வி இருந்தது. அதற்கான விடையை கோலி டாஸ் போடும் போது தான் கிடைத்தது. கோலி அளித்த அணி வீரர்கள் பட்டியலில் ஜடேஜா பெயர் இடம் பெற்று இருந்தது.

ஜடேஜா உள்ளே
பண்டியா வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்ற நிலையில் அவருக்கு மாற்றாக ஜடேஜாவை களமிறக்கியுள்ளார் கோலி. ஜடேஜா சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்ற நிலையில் இது எந்த வகையில் சரியான தேர்வாக அமையும் என்பது போட்டியின் முடிவில் தான் தெரிய வரும்.

வீரர்கள் யார் யார்?
அதே போல மிடில் ஆர்டரில் அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி இடம் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களில் வழக்கம் போல தவான், ரோஹித் சர்மா மற்றும் கோலி களம் இறங்குகின்றனர். பந்துவீச்சாளர்களாக ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது களமிறங்குகின்றனர்.

இந்திய அணி விவரம்
இந்திய அணி - தவான், ரோஹித் சர்மா, கோலி, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது.


Click it and Unblock the Notifications