Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸ் வென்றால் பேட்டிங்கா? பவுலிங்கா? இந்தியாவை வீழ்த்த வாக்கெடுப்பு நடத்திய ஆஸ்திரேலிய அணி கேப்டன்

மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில், அதற்கு முந்தைய தினம் ஆஸ்திரேலிய அணியினர் டாஸ் குறித்து முடிவு செய்ய சுமார் இரண்டு மணி நேரம் தீவிரமாக விவாதம் செய்து திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணமே ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது தான். அதனால் தான் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களுக்குள் சுருண்டது. அந்த சிறிய இலக்கை ஆஸ்திரேலியா எளிதாக சேஸிங் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆறாவது முறையாக உலகக்கோப்பை வென்றது.

தற்போது அந்த முடிவை எடுக்க ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் எந்த அளவுக்கு திட்டம் தீட்டி இருக்கிறார் என்பது பற்றி ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் டேவிட் வார்னர் கூறி இருக்கிறார்.

INDIA vs AUSTRALIA : Australian captain Pat Cummins plan for toss before final match

இந்தியா - ஆஸ்திரேலியா உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் இரவு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பயிற்சியாளர் குழு இறுதிப் போட்டியில் டாஸ் வென்றால் என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து விவாதம் செய்யத் துவங்கினர். பொதுவாக 30 - 40 நிமிடங்களில் முடிந்து விடும் டாஸ் விவாதம், இறுதிப் போட்டி என்பதால் சுமார் இரண்டு மணி நேரம் வரை நீண்டு இருக்கிறது.

போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தின் புள்ளி விவரம், இந்திய அணி சமீபத்தில் ஆடிய போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்துள்ளது, சேஸிங்கில் என்ன செய்துள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா என்ன செய்யும்? என பல புள்ளி விவரங்களை வைத்து டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பவுலிங் செய்வதா? என அந்த விவாதம் நீண்டு இருக்கிறது.

அவர்கள் சேகரித்த புள்ளி விவரத்தின்படி முதலில் பேட்டிங் செய்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார் பேட் கம்மின்ஸ். ஆனால், அதன் பின் மற்ற ஆஸ்திரேலிய வீரர்களை அழைத்து முதலில் பேட்டிங் செய்வோமா? அல்லது சேஸிங் செய்வோமா? என கேட்டு வாக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்.

அதற்கு பல ஆஸ்திரேலிய வீரர்கள் சேஸிங் செய்வோம் எனக் கூறி இருக்கின்றனர். அதற்கு மற்ற வீரர்கள் கூறிய காரணம், முதலில் பந்துவீசி ஆடுகளத்தின் தன்மை என்ன என்பதை நாம் புரிந்து கொண்டு, அதை வைத்து பின்னர் சேஸிங் செய்யலாம் என கூறி இருக்கின்றனர். அதன் பிறகே ஆஸ்திரேலிய அணி கேப்டன் முடிவை மாற்றி வீரர்களின் விருப்பத்துக்கு ஏற்ப டாஸ் வென்றால் முதலில் பந்து வீசி விட்டு, பின்னர் சேஸிங் செய்வது என்ற முடிவை எடுத்து இருக்கிறார்.

அவர்கள் முடிவுக்கு ஏற்ப ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் டாஸ் வென்றது. பேட் கம்மின்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா உலகக்கோப்பையையும் வென்றது.

Story first published: Thursday, November 23, 2023, 14:05 [IST]
Other articles published on Nov 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+