Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா போல பந்து வீச முயன்ற ஆஸி. சிறுவன்.. லைக் போட்ட பும்ரா.. எதிர்கால வீரர் என்ற ஐசிசி

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கலக்கலாக பந்து வீசினார் பும்ரா. அவரை போல ஆஸ்திரேலிய சிறுவன் பந்து வீசும் அழகான காட்சி இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி ஓராண்டு தான் ஆகிறது. அதற்குள் டெஸ்டின் முன்னணி பந்துவீச்சாளர் என்ற அளவுக்கு புகழ் பெற்றுள்ளார்.

பும்ரா மீது விமர்சனங்கள்

பும்ரா மீது விமர்சனங்கள்

பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி தொடக்க காலத்தில் பல விமர்சனங்கள் இருந்தது. அவர் குறைந்த தூரம் மட்டுமே ஓடி வந்து வேகமாக பந்து வீசுகிறார். இது போல எந்த பந்துவீச்சாளரும் சமீப காலத்தில் வீசியதில்லை.

எடுபடாது என்றார்கள்

எடுபடாது என்றார்கள்

பும்ராவின் பந்துவீச்சு முறை எடுபடாது என்றே பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறினார்கள். அதை உடைத்து சுக்கு நூறாக்கி அவர்கள் வாயாலேயே தன்னை புகழ வைத்துள்ளார் பும்ரா. இப்போது அதையும் தாண்டி பல சிறுவர்கள் பும்ராவின் பந்துவீச்சை பின்பற்ற முயன்று வருகிறார்கள்.

குவிந்த லைக்குகள்

குவிந்த லைக்குகள்

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில், அந்த நாட்டு சிறுவன் ஒருவன் பும்ரா போலவே ஓடி வந்து வீசும் வீடியோ காட்சி ட்விட்டரில் பகிரப்பட்டது. அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றன.

அடுத்த தலைமுறை

அந்த வீடியோவை பதிவிட்டவர், இந்தியா தொடரில் வெற்றி பெற்றதில் ஒரே ஒரு பிரச்சனை மட்டுமே உள்ளது. அடுத்த தலைமுறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பும்ராவால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என கூறி இருந்தார்

பும்ரா சொன்ன வாழ்த்து

பும்ரா அந்த சிறுவனுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தன் வாழ்த்தில், "அந்த சிறுவன் மிகவும் அழகாக இருக்கிறான். என் வாழ்த்துக்களை அவனுக்கு கூறுங்கள்" என தெரிவித்து இருந்தார்.

ஐசிசி வேடிக்கை

ஐசிசி இந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு, "ஆஸ்திரேலியா - இந்தியா தொடர் 2034இல் இப்படி தான் இருக்கும்" என வேடிக்கையாக கூறி இருந்தது. ஒரு வேளை ஐசிசி கூறியது போல இன்னும் சில ஆண்டுகளில் இந்த சிறுவன் ஆஸ்திரேலிய அணியில் சேர்ந்து, இந்தியாவுக்கு எதிராக ஆடலாம்!!

பாகிஸ்தான் நாட்டு சிறுவன்

பாகிஸ்தான் நாட்டு சிறுவன்

ஏற்கனவே பாகிஸ்தான் அணியை ஆசிய கோப்பையில் இந்தியா வீழ்த்திய பின்னர், பாகிஸ்தான் நாட்டு சிறுவன் ஒருவன் இதே போல பந்து வீசும் வீடியோ இணையத்தை கலக்கியது.

பும்ராவால் பெருமை

பும்ராவால் பெருமை

மற்ற நாட்டு சிறுவர்கள் இந்திய பந்துவீச்சாளர் ஒருவரை பின்பற்றுவது என்பது இதுவரை நடக்காத ஒரு காரியம். இந்தியர்கள் பலரும் வெளிநாட்டு ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை பின்பற்றி வந்த நிலையில் அதை உடைத்து இந்தியர் ஒருவர் தன் தனித்துவத்தை நிலை நாட்டி உள்ளார். பும்ராவால் இந்தியாவுக்கே பெருமை!!

Story first published: Wednesday, January 9, 2019, 15:46 [IST]
Other articles published on Jan 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+