For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. பிரதமர் கேட்ட அந்த ஒரு கேள்வி.. சிரித்து மழுப்பிய ரிஷப் பண்ட்.. விருந்தில் நடந்த சுவாரஸ்யம்

சிட்னி : புத்தாண்டன்று ஆஸ்திரேலிய பிரதமர் விருந்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ட சுவாரஸ்யமான கேள்வி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் சுவாரஸ்ய கேள்வி

பிரதமர் சுவாரஸ்ய கேள்வி

ஆஸ்திரேலிய பிரதமர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பில் இந்திய வீரர்களை வரவேற்று கை குலுக்கினார் ஆஸி. பிரதமர். அப்போது ரிஷப் பண்ட்டோடு கை குலுக்கிய போது "ஆ.. ஆமாம்.. நீதானே ஸ்லெட்ஜிங் செய்தது" என கேட்டார். இதை எதிர்பார்க்காத ரிஷப் பண்ட் ஒரு நொடி ஸ்தம்பித்து பின் சிரித்து மழுப்பினார்.

ரிஷப் பண்ட் சீண்டல்

ரிஷப் பண்ட் சீண்டல்

ரிஷப் பண்ட் முதல் டெஸ்ட் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் செய்யும் போது கீப்பிங் செய்து கொண்டே அவர்களை சீண்டி வந்தார். பாட் கம்மின்ஸ், ஆஸி. கேப்டன் டிம் பெய்ன், கவாஜா என பலரையும் குறி வைத்து சீண்டினார் பண்ட்.

போட்டியை விரும்புவோம்

போட்டியை விரும்புவோம்

இதை தான் ஆஸ்திரேலிய பிரதமர் கேட்டுள்ளார். ரிஷப் பண்ட் ஒருவாறு சிரித்து சமாளித்தார். பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர், "உங்களை வரவேற்கிறோம். போட்டி மிகுந்த விளையாட்டை நாங்கள் விரும்புவோம்" என ரிஷப் பண்ட்டின் சீண்டல்களை விளையாட்டின் அங்கமாக எடுத்துக் கொண்டதை நினைவு கூர்ந்தார்.

கேப்டனின் குழந்தைகளோடு பண்ட்

கேப்டனின் குழந்தைகளோடு பண்ட்

இந்த சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் கோலியையும் புகழ்ந்து பேசினார் ஆஸ்திரேலிய பிரதமர். மறுபுறம் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய அணி கேப்டனின் குழந்தைகளோடு சிறிது நேரம் செலவழித்தார்.

செய்து காட்டிய ரிஷப் பண்ட்

செய்து காட்டிய ரிஷப் பண்ட்

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் மூன்றாவது போட்டியில், ரிஷப் பண்ட்டை கலாய்த்து, தன் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை அப்படியே செய்து காட்டினார் ரிஷப் பண்ட்.

Story first published: Wednesday, January 2, 2019, 17:45 [IST]
Other articles published on Jan 2, 2019
English summary
India vs Australia : Australian PM asked about the sledging of Rishab pant
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+