Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆத்தாடி பயங்கரமா இருக்கே.. இந்திய ஒருருநாள் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு.. முழு பலத்தை காட்ட முடிவு!

மும்பை : இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது.

அந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இன்னும் சில தினங்களில் இந்தியா வர உள்ளது. அதற்கு முன்னதாக அந்த தொடரில் பங்கேற்க இருக்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

INDIA vs AUSTRALIA : Australias team for India series announced

2023 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி ஒருநாள் தொடர் இதுதான். உலகக்கோப்பை பயிற்சிக்காக இரு அணிகளும் இந்த தொடரில் மோதுவது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி முழு பலம் கொண்ட அணியை அறிவித்து இருக்கிறது.

சமீபத்தில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், கிளேன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை. தற்போது உலகக்கோப்பையை முன்னிட்டு அந்த வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பி உள்ளனர். மேலும், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், ஸீன் அபாட், லாபுஷேன், ஸ்டோனிஸ் என அனுபவ வீரர்கள் பலர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், தென் ஆப்ரிக்க தொடரில் காயம் அடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரரை கண்டறியும் கட்டாயமும் ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது.

இந்திய ஒருநாள் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸீன் அபாட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரான் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், ஜோஷ் இங்கலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா

இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை தொடர் முடிந்த பின் பிசிசிஐ அணியை அறிவிக்கக்கூடும்.

Story first published: Sunday, September 17, 2023, 15:22 [IST]
Other articles published on Sep 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+