Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண மழையில் நனையும் இளம் இந்திய வீரர்கள்.. ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிசிசிஐ சிறப்பு பரிசு

Recommended Video

India wins series | ஆஸி. டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிசிசிஐ சிறப்பு பரிசு | Oneindia Tamil

மும்பை : இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

அதற்கு பிசிசிஐ இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஊக்கத்தொகை பரிசு அறிவித்துள்ளது. அதன் படி இந்திய அணியினர் இந்த தொடருக்கு சம்பளத்துடன் கூடுதல் ஊக்கத்தொகை பெற உள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தருணம் ஆகும். சுமார் 71 ஆண்டுகளாக இந்தியா ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையிலான இந்திய அணி முதன் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது.

இம்ரான் கான் வாழ்த்து

இம்ரான் கான் வாழ்த்து

ஆசிய அளவிலும் எந்த அணியும் இது வரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை. முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் கூட ஆசிய அளவில் இந்திய அணி சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கத்தொகை அறிவித்த பிசிசிஐ

ஊக்கத்தொகை அறிவித்த பிசிசிஐ

மிகப் பெரிய சாதனையான இந்த நிகழ்வுக்கு இந்திய அணிக்கு பரிசளிக்க முடிவு செய்த பிசிசிஐ, இந்திய அணி வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தை ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது. அதன் படி களமிறங்கிய வீரர்களுக்கு போட்டிக்கு தலா 15 லட்சமும், களம் இறங்காத வீரர்களுக்கு போட்டிக்கு தலா 7.5 லட்சமும் வழங்கப்படும். இதன் படி நான்கு போட்டிகளிலும் ஆடிய வீரர்களுக்கு 60 லட்சம் கிடைக்கும்.

வீரர்கள் அல்லாதவர்களுக்கு..

வீரர்கள் அல்லாதவர்களுக்கு..

பயிற்சியாளர்களுக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் அல்லாத ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது.

ஆஸி. ஒருநாள் தொடர்

ஆஸி. ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலியாவில் அடுத்து இந்தியா ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. முதல் போட்டி ஜனவரி 12 அன்று தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஜனவரி 15 மற்றும் 18 தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறும். இந்த தொடரில் பங்கேற்க தோனி, ரோஹித் சர்மா, கேதார் ஜாதவ், கலீல் அஹ்மது உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலியா விரைந்துள்ளனர்.

Story first published: Tuesday, January 8, 2019, 18:09 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+