For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. கேப்டன் விக்கெட்டை வீழ்த்த ஸ்கெட்ச் போட்ட தோனி - புவி.. ஆனா இப்படி ஆகிடுச்சே!!

Recommended Video

புவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்- வீடியோ

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் வீசிய ஒரு பந்தை டெட் பால் என அறிவித்தார் அம்பயர்.

தோனி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆரோன் பின்ச் விக்கெட்டை வீழ்த்த திட்டமிட்டனர். அதன் படி புவனேஸ்வர் குமார் பந்து வீசினார். அந்த பந்து தான் டெட் பாலாக மாறியது.

திட்டம் தீட்டினார்

திட்டம் தீட்டினார்

புவனேஸ்வர் குமார் கடந்த இரண்டு போட்டிகளில் பின்ச் விக்கெட்டை முதல் சில ஓவர்களில் வீழ்த்திய நிலையில், மூன்றாவது போட்டியிலும் அதே போல வீழ்த்த தோனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார் புவனேஸ்வர்.

டெட் பால் ஆன திட்டம்

அந்த திட்டத்தின் படி புவனேஸ்வர் குமார், விக்கெட்டுக்கு சில அடி தூரம் பின்னே இருந்து பந்து வீசினார். இதன் மூலம் பின்ச் பந்தை எதிர்கொள்ள திணறுவார் என எதிர்பார்த்த நிலையில், அம்பயர் இந்த பந்தை டெட் பால் என அறிவித்தார்.

இணையத்தில் விவாதம்

எனினும், அடுத்த பந்திலேயே புவனேஸ்வர், பின்ச் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆனால், புவனேஸ்வர் அதற்கு முன்பு வீசிய பந்து டெட் நாள் தானா? என்ற விவாதம் இணையத்தில் சூடு பிடித்துள்ளது.

மிட்செல் ஜான்சன் பந்துவீச்சு

மிட்செல் ஜான்சன் பந்துவீச்சு

ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஜான்சன் முன்பு ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போல விக்கெட்டுக்கு சில அடி தூரம் பின்னே இருந்து பந்து வீசினார். அப்போது அது சரியான பந்தாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இதை வைத்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு தீர்ப்பு, இந்திய அணிக்கு ஒரு தீர்ப்பா என அம்பயர் முடிவை விமர்சித்து வருகிறார்கள். புவனேஸ்வர் குமார் துவக்கத்திலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணிக்கு பந்துவீச்சில் சிறந்த துவக்கம் அளித்தார்.

இந்திய பந்துவீச்சு

இந்திய பந்துவீச்சு

புவனேஸ்வர் குமார் தவிர்த்து இந்த போட்டியில் ஷமி, விஜய் ஷங்கர் இருவரும் கட்டுக் கோப்பாக பந்து வீசினர். சாஹல் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Story first published: Friday, January 18, 2019, 11:46 [IST]
Other articles published on Jan 18, 2019
English summary
India vs Australia : Bhuvaneswar kumar dead ball to get Aaron Finch wicket
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+