Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது என்னடா சோதனை!! பந்துவீச்சில் கங்குலி, சச்சின், யுவராஜுக்கு டஃப் கொடுக்கும் புவனேஸ்வர் குமார்

சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

100வது ஒருநாள் போட்டி விக்கெட்

100வது ஒருநாள் போட்டி விக்கெட்

இந்திய அணி பந்துவீச்சில் துவக்கத்திலேயே புவனேஸ்வர் குமார் இரண்டாவது ஓவரிலேயே ஆரோன் பின்ச்சை 6 ரன்களில் வெளியேற்றி அசத்தினார். அந்த விக்கெட் புவனேஸ்வர் குமாரின் 100வது ஒருநாள் போட்டி விக்கெட் ஆகும்.

19வது வீரர் ஆவார்

19வது வீரர் ஆவார்

புவனேஸ்வர் குமார் 96 போட்டிகளில், 95 இன்னிங்க்ஸ்களில் பந்துவீசி தன் 100வது விக்கெட்டை எட்டியுள்ளார். இவர் இந்திய அணியில் இந்த மைல்கல்லை எட்டும் 19வது வீரர் ஆவார். எனினும், புவனேஸ்வர் இந்த மைல்கல்லை எட்டிய போது, ஒரு மோசமான பதிவையும் செய்துள்ளார்.

ஐந்தாம் இடம்

ஐந்தாம் இடம்

இந்திய வீரர்களில் 100 ஒருநாள் போட்டி விக்கெட்களை வீழ்த்த அதிக போட்டிகளை எடுத்துக் கொண்ட வீரர்களில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் புவனேஸ்வர் குமார். மற்ற நான்கு வீரர்கள் கங்குலி, சச்சின், யுவராஜ் மற்றும் ரவி சாஸ்திரி.

எத்தனை போட்டிகளில் 100?

எத்தனை போட்டிகளில் 100?

கங்குலி 308 போட்டிகளிலும், சச்சின் 268 போட்டிகளிலும், யுவராஜ் சிங் 266 போட்டிகளிலும், ரவி சாஸ்திரி 100 போட்டிகளிலும் தங்கள் 100வது விக்கெட்டை வீழ்த்தினர். இவர்கள் நால்வருமே பகுதி நேர பந்துவீச்சாளர் ஆவர். இவர்களுடைய வரிசையில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் இடம் பெற்று இருப்பது எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது.

விரைவாக 100 யார்?

விரைவாக 100 யார்?

இந்திய அளவில் விரைவாக 100 ஒருநாள் போட்டி விக்கெட்களை எட்டியது இர்பான் பதான் ஆவார். அவர் 59 போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டினார். சர்வதேச அளவில் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷித் கான் 44 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.

திறமை உண்டு

திறமை உண்டு

கடந்த 2012இல் இருந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி வரும் புவனேஸ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்துவதில்லை என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புவனேஸ்வர் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர் என்றாலும், அதை விக்கெட்களாக மாற்ற முயல வேண்டும்.

Story first published: Saturday, January 12, 2019, 13:56 [IST]
Other articles published on Jan 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+