Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணை, தேதி, மைதானம் மற்றும் இந்திய அணி விவரம்

மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 முதல் தொடங்க உள்ளது. அந்த தொடருக்கான அணி விவரம், போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவற்றை இங்கே காணலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பல ஆண்டுகளாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே மோதி வந்தன. நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. இந்த ஐந்து போட்டிகளும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஐந்து வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளன.

ind vs aus india australia

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடர் அட்டவணை:

முதல் டெஸ்ட்: நவம்பர் 22 - 26 - பெர்த் மைதானம், பெர்த்

2வது டெஸ்ட்: டிசம்பர் 6 - 10 - அடிலெய்டு ஓவல் மைதானம், அடிலெய்டு

3வது டெஸ்ட்: டிசம்பர் 14 - 18 - காபா மைதானம், பிரிஸ்பேன்

4வது டெஸ்ட்: டிசம்பர் 26 - 30 - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

5வது டெஸ்ட்: ஜனவரி 3 - 7 - சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) , அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

ரிசர்வ் வீரர்கள் : முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது

இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டு முறை தொடரைக் கைப்பற்றி இருந்தது. மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றால் ஹாட்ரிக் சாதனையாக இருக்கும். எந்த அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்று முறை டெஸ்ட் தொடரில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 26, 2024, 8:41 [IST]
Other articles published on Oct 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+