Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை.. தேதி, நேரம், எந்த சேனல், ஸ்ட்ரீமிங்கில் ஒளிபரப்பு?

பெர்த்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இந்த டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் துவங்க உள்ளன. எந்தெந்த தேதிகளில் போட்டிகள் நடக்க உள்ளன? போட்டி ஒவ்வொரு நாளும் எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த தொலைக்காட்சி சேனல் மற்றும் எந்த மொபைல் ஆப்-இல் போட்டிகளை காணலாம்? என்பது பற்றி இங்கே விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அட்டவணை (இந்திய நேரப்படி) -

ind vs aus india australia

முதல் டெஸ்ட் - நவம்பர் 22 - 26, ஓபஸ் ஸ்டேடியம், பெர்த் - போட்டி தொடக்கம் - காலை 7.50

2வது டெஸ்ட் (பகல் - இரவு) - டிசம்பர் 6 - 10, அடிலெய்டு - போட்டி தொடக்கம் - காலை 9.30

3வது டெஸ்ட் - டிசம்பர் 14 - 18, காபா, பிரிஸ்பேன் - போட்டி தொடக்கம் - காலை 5.50

4வது டெஸ்ட் - டிசம்பர் 26 - 30 (பாக்ஸிங் டே டெஸ்ட்), மெல்போர்ன் - போட்டி தொடக்கம் - காலை 5.00

5வது டெஸ்ட் - ஜனவரி 3 - 7, 2025, சிட்னி - போட்டி தொடக்கம் - காலை 5.00

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரை எந்த தொலைக்காட்சி சேனலில் நேரலையில் பார்க்கலாம்?

2024 - 25 இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் பார்க்கலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரை எந்த மொபைல் ஆப்-இல் நேரலையில் பார்க்கலாம்?

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரை நேரலையில் இலவசமாக காணலாம். இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் போட்டிகளை நேரலையில் காணலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி விவரம் -

18 வீரர்கள் கொண்ட இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கே எல் ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.

13 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி - பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Story first published: Tuesday, November 19, 2024, 12:44 [IST]
Other articles published on Nov 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+