For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே வருடத்தில் மூன்று முறை! எந்த ஆசிய பந்துவீச்சாளரும் செய்யாத சாதனை!! டெஸ்டில் கலக்கும் பும்ரா

மெல்போர்ன் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை நிலை குலைய வைத்தார்.

முதல் இன்னிங்க்ஸில் ஆறு விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா, ஆசிய அளவில் எந்த ஜாம்பவான் பந்துவீச்சாளரும் செய்யாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

6 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா

6 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா

இந்தியா - ஆஸ்திரேலியா ஆடும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸில் 151 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா 6 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சை பதிவு செய்தார்.

3 முறை ஐந்து விக்கெட்கள்

3 முறை ஐந்து விக்கெட்கள்

பும்ரா இந்த ஆண்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களிலும் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் 54 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இங்கிலாந்தில் 85 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

ஒரே ஆண்டில் மூன்று முறை

ஒரே ஆண்டில் மூன்று முறை

அதை தொடர்ந்து மெல்போர்னில் 33 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்ததன் மூலம், ஒரே ஆண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

அறிமுக ஆண்டு சாதனை

அறிமுக ஆண்டு சாதனை

முன்னதாக அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து சாதனை செய்தார் பும்ரா. அவர் இந்த ஆண்டு தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அறிமுகமான ஆண்டில் இது வரை 45 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Story first published: Friday, December 28, 2018, 19:10 [IST]
Other articles published on Dec 28, 2018
English summary
India vs Australia : Bumrah achieved a unique asian bowling record. And he became the first Asian bolwer to do so.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+