Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, விஜய் ஷங்கர் இருக்கட்டும்.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான்!

Recommended Video

Bumrah Bowling vs Australia | இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான்!

நாக்பூர் : பும்ரா சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அசத்தலாக பந்து வீசினார்.

இரண்டாவது போட்டியின் வெற்றிக்கு சதம் அடித்த கேப்டன் கோலி மற்றும் பேட்டிங் மற்றும் கடைசி ஓவரில் கலக்கிய விஜய் ஷங்கரும் தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில், பும்ராவும் முக்கிய பங்காற்றி உள்ளார்.

கடைசி 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்கள்

இந்த போட்டியில் பும்ரா மிக மிக கட்டுக் கோப்பாக பந்து வீசினார். அதிலும் கடைசி 5 ஓவர்களில் 2 ஓவர்கள் வீசிய பும்ரா, ஆஸ்திரேலிய அணியை மிரட்டி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

2 ரன்கள், 2 விக்கெட்கள்

2 ரன்கள், 2 விக்கெட்கள்

46வது மற்றும் 48வது ஓவர்களை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் தலா 1 ரன் மட்டுமே கொடுத்தார். மேலும் 46வது ஓவரில் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை சிக்கலில் ஆழ்த்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணி கடைசி நேர அழுத்தத்தில் வெற்றியை பறி கொடுத்தது.

பும்ரா பந்துவீச்சு

பும்ரா பந்துவீச்சு

இந்த போட்டியில் பும்ரா தான் வீசிய 10 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மற்ற பந்துவீச்சாளர் அனைவரும் குறைந்தது 4 ரன்களுக்கும் மேல் கொடுத்திருந்தனர்.

முகமது ஷமி அதிகம்

முகமது ஷமி அதிகம்

சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான நாக்பூர் ஆடுகளத்தில், சக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி இந்த போட்டியில் 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்திருந்தார். ஆனால், பும்ரா மிகவும் கட்டுக்கோப்பாக வீசி ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார்.

பும்ரா முக்கிய காரணம்

பும்ரா முக்கிய காரணம்

கோலி அடித்த சதம் மற்றும் விஜய் ஷங்கரின் 46 ரன்கள் மற்றும் கடைசி ஓவர் போட்டியின் வெற்றிக்கு காரணம் என்றாலும், பும்ராவின் 10 ஓவர்கள், குறிப்பாக கடைசி 2 ஓவர்கள் இல்லாவிட்டால் இந்தியா வென்று இருக்காது.

Story first published: Wednesday, March 6, 2019, 14:42 [IST]
Other articles published on Mar 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+