For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ரா சரியா வர மாட்டார்னு நினைச்சேன்.. இப்ப எங்கேயோ போயிட்டார்.. முன்னாள் கேப்டன் பாராட்டு

டெல்லி : முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ், பும்ராவை பற்றிய தன் முந்தைய எண்ணங்களை தவறு என அவர் நிரூபித்து விட்டதாக கூறி பும்ராவை புகழ்ந்துள்ளார்.

பும்ரா சிறப்பான தோள்களை கொண்டு இருக்கிறார் எனவும், மிக திடமான மனதை கொண்டவர் என்றும் கூறி பாராட்டியுள்ளார்.

தவிடு பொடியாக்கிய பும்ரா

தவிடு பொடியாக்கிய பும்ரா

பும்ரா தனி பாணியை கடைபிடித்து பந்து வீசி வருகிறார். மிக குறைந்த தூரமே ஓடும் பும்ரா அதிவேகத்தில் பந்து வீசுகிறார். இந்த பாணியில் நீண்ட நாள் பும்ராவால் தாக்குப் பிடிக்க முடியாது என நினைத்த கபில் தேவின் அந்த எண்ணத்தை பும்ரா தவிடு பொடியாக்கி உள்ளார்.

ஹேட்ஸ் ஆஃப் பும்ரா

ஹேட்ஸ் ஆஃப் பும்ரா

கபில் தேவ் கூறுகையில், "பும்ராவை முதலில் பார்க்கையில் இந்த பந்துவீச்சு முறையில் அவரால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியுமா என நினைத்தேன். ஆனால், அதை அவர் செய்து காட்டியுள்ளார். அவருக்கு ஹேட்ஸ் ஆஃப். ஆஸ்திரேலியாவில் அவரது சிறப்பான செயல்பாட்டை நான் பாராட்ட விரும்புகிறேன்" என கூறினார்.

சிறப்பான தோள்கள் கொண்ட பும்ரா

சிறப்பான தோள்கள் கொண்ட பும்ரா

மேலும் பும்ரா குறைந்த தூரமே ஓடி வந்து 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவதை குறிப்பிட்ட கபில் தேவ், அதற்காகவே நான் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என கூறினார். அவருக்கு சிறப்பான தோள்கள் அமைந்துள்ளது. இது போன்ற பந்துவீச்சாளர்கள் தனித்துவமானவர்கள் எனவும் பாராட்டினார்.

ஸ்ரீநாத், ஜாகிர் கான்

ஸ்ரீநாத், ஜாகிர் கான்

இதற்கு முன் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருந்தனரா? என்பது பற்றி கபில் தேவ் கூறினார். பும்ராவுக்கு முன் ஸ்ரீநாத் குறுகிய காலத்திலேயே முன்னணி பந்துவீச்சாளராக மாறினார். ஜாகிர் கான் சிறிது காலம் எடுத்துக் கொண்டார் என தெரிவித்தார்.

ஷமியை மதிக்க வேண்டும

ஷமியை மதிக்க வேண்டும

அதே போல தற்போது இந்தியாவின் மற்றொரு முக்கிய பந்துவீச்சாளராக வலம் வரும் ஷமி பற்றிய தன் கருத்துக்களை தெரிவித்தார். ஷமி காயங்களில் இருந்து மீண்டு, முழு பலத்துடன் வந்துள்ளார். அவரையும் நாம் மதிக்க வேண்டும் என கூறினார் கபில் தேவ்.

Story first published: Tuesday, January 1, 2019, 14:20 [IST]
Other articles published on Jan 1, 2019
English summary
India vs Australia : Bumrah has a special shoulder says Kapil Dev
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+