Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஏமாத்தீட்டீங்களே பும்ரா! ஸ்தம்பித்த ஷான் மார்ஷ்.. பும்ராவின் அசத்தல் விக்கெட்

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா அசத்தலாக பந்துவீசி விக்கெட்களை சாய்த்து வருகிறார்.
அதில் குறிப்பிட்ட ஒரு விக்கெட்டை சாமர்த்தியமாக பந்து வீசி எடுத்தார். பும்ரா ஏன் முன்னணி பந்துவீச்சாளராக அறியப்படுகிறார் என்பதற்கு அது ஒரு உதாரணமாக அமைந்தது.

விக்கெட் இழப்பு

விக்கெட் இழப்பு

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 443 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, மூன்றாம் நாள் துவக்கத்தில் இருந்தே விக்கெட்களை சீரான இடைவெளியில் இழந்து வந்தது.

குறைந்த வேகம்

குறைந்த வேகம்

மூன்று விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் பேட்டிங் செய்து வந்தார். அப்போது பந்து வீசிய பும்ரா திடீரென தன் இயல்பான வேகமான 140+ கிலோமீட்டரில் இருந்து 113 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்.

தடுமாறிய ஷான் மார்ஷ்

தடுமாறிய ஷான் மார்ஷ்

அந்த பந்து நேராக ஸ்டம்ப்களை நோக்கி வீசப்பட்டது. ஷான் மார்ஷ் அதிவேகமான பந்தை எதிர்பார்த்து இருந்த நிலையில், வேகம் குறைந்து வந்த பந்தை கணிக்க தவறினார். பந்தை தடுக்க முடியாமல் நிலை தடுமாறிய மார்ஷ்ஷின் காலில் பட்டது பந்து.

அவுட் கொடுத்தார் அம்பயர்

அவுட் கொடுத்தார் அம்பயர்

இதற்கு எல்.பி.டபுள்யூ கொடுத்தார் அம்பயர். சாமர்த்தியமாக பந்து வீசிய பும்ரா, சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஷான் மார்ஷ் ஒரு சில வினாடிகள் என்ன நடந்தது என யோசித்து பின் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. ஃபாலோ ஆன் வாங்க அதிக வாய்ப்புள்ளது.

பவுன்சர் தாக்குதல்

பவுன்சர் தாக்குதல்

இந்த தொடரில் பும்ரா ஆஸ்திரேலிய அணியும் துவக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ்-இன் ஹெல்மட்டில் இரண்டாவது முறையாக தன் பவுன்சர் மூலம் தாக்கியுள்ளார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி வருகிறார் பும்ரா.

Story first published: Friday, December 28, 2018, 10:49 [IST]
Other articles published on Dec 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+