Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் சில மாதங்கள் தான்.. அப்புறம் பும்ரா எங்கேயோ போயிடுவார்.. ஆஸி. முன்னாள் வீரர் புகழாரம்

மெல்போர்ன் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தலாக பந்து வீசி வருகிறார்.

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தினார்.

மிகவும் நேர்த்தியாக பந்து வீசும் பும்ராவை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் புகழ்ந்து பேசியுள்ளார்.

முதல் இடத்தை பிடிப்பார்

முதல் இடத்தை பிடிப்பார்

பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்து மிக விரைவிலேயே டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து விடுவார் என கூறினார் கிளார்க்.

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்

கிளார்க் கூறுகையில், "பும்ரா மற்ற வீரர்களுக்கும், கேப்டனுக்கும் ஏற்ற மிகச் சிறந்த வீரர். எந்த எதிர்பார்ப்பு, அழுத்தம் எதுவும் அவரை பாதிப்பதில்லை. அவர் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கிறார். விரைவிலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தை பெற்று விடுவார்" என புகழ்ந்தார்.

சில மாதங்கள் போதும்

சில மாதங்கள் போதும்

"பும்ரா தற்போது தான் டெஸ்ட் போட்டிகளில் தொடங்கி உள்ளார். தரவரிசையில் அவர் முதல் ரேங்கில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் தான் இப்போது சிறந்த வீரர். அடுத்த சில மாதங்களில், மூன்று வித கிரிக்கெட் தரவரிசையிலும் முதல் இடத்தை பிடித்து விடுவார்" என கூறினார் கிளார்க்.

அறிமுக ஆண்டில் அதிகம்

அறிமுக ஆண்டில் அதிகம்

பும்ரா இந்த ஆண்டில் தான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன ஒரே ஆண்டில் மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ் வரை 45 விக்கெட்கள் எடுத்துவிட்டார். இதன் மூலம் இந்திய அளவில் அறிமுக ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்தார்.

ஒரே ஆண்டில் 3 ஐந்து விக்கெட்கள்

ஒரே ஆண்டில் 3 ஐந்து விக்கெட்கள்

அதே போல, ஒரே ஆண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரே டெஸ்ட் இன்னிங்க்ஸில் ஐந்துக்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

பந்துவீச்சின் கோலி

பந்துவீச்சின் கோலி

இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, பும்ராவை பந்துவீச்சின் கோலி என கூறி புகழ்ந்துள்ளார். கோலி தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அணி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் கை கொடுத்து பேட்டிங் செய்து வருகிறார். அதே போல, பும்ராவும் பந்துவீச்சில் அணிக்கு கை கொடுக்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

Story first published: Saturday, December 29, 2018, 12:41 [IST]
Other articles published on Dec 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+