Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ விட்டுக் கொடுக்குமா? ஐசிசி விதி சொல்வது என்ன?

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை கைவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அப்படி செய்யவில்லை என்றாலும் நான்காம் நாள் முடிவில் இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் எப்படியாவது இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று விட வேண்டும் என ஆஸ்திரேலியா குறியாக இருந்தது. அதற்காகவே முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஃபாலோ - ஆன் கொடுக்க முயன்றது. ஆனால், அந்த கண்டத்தை இந்திய அணி கடந்தது.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. ஆனால், மழையின் காரணமாக மூன்றாவது நாள் அன்றுதான் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் ஐந்தாம் நாள் அன்று காலையில் தான் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துள்ளது. 200 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று இருந்தால் ஃபாலோ ஆன் கொடுக்கலாம் என்ற விதி உள்ளது. அதை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வைக்க திட்டமிட்டது.

ஆனால், இந்திய அணி 260 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா 185 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது. எனவே, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஐந்தாம் நாள் அன்று மழையின் காரணமாக நீண்ட நேரமாக ஆஸ்திரேலியா அணியால் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை துவக்க முடியவில்லை.

அப்போது ஆஸ்திரேலியா அணியால் தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை விட்டுக் கொடுத்துவிட்டு இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைக்க முடியுமா? என்ற கேள்வி சிலருக்கு எழுந்தது. கிரிக்கெட் விதிப்படி நிச்சயமாக அப்படி செய்ய முடியும்.

ஒரு அணி தனது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட்டத்தை துவக்குவதற்கு முன்பாகவே அந்த இன்னிங்ஸில் பேட்டிங்கை விட்டுக் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டு எதிரணியை பேட்டிங் ஆட அழைக்கலாம். ஆனால், விட்டுக் கொடுத்த பேட்டிங் இன்னிங்ஸை மீண்டும் ஆட முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.

எனினும், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆட முடிவு செய்தது. விரைவாக ரன் சேர்த்து இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்த திட்டமிட்டது.

Story first published: Wednesday, December 18, 2024, 8:58 [IST]
Other articles published on Dec 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+