Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னை பார்த்தாலே வார்னர் ஓடிவிடுவார்.. கதற கதற ஸ்லெட்ஜிங் செய்துள்ளேன்.. புஜாரா ஓபன் டாக்!

மும்பை: ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் தன்னை கண்டால் அருகிலேயே வர மாட்டார் என்று இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். அவரை அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்வேன் என்பதால், பேட்டிங் செய்யும் போது கூட வார்னர் என் பக்கம் திரும்ப மாட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புஜாரா. இம்முறை புஜாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

ind vs aus border gavaskar trophy pujara

ஆஸ்திரேலியா பிட்ச்கள், ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் இந்திய அணியின் தவறுகள் உள்ளிட்டவை குறித்து புஜாரா அளித்து வரும் கருத்துகள் ஒவ்வொன்றும் துல்லியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் காபா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் வர்ணனையில் இருந்த புஜாரா, ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார்.

அதில், ஆஸ்திரேலியா ஜாம்பவான் டேவிட் வார்னர் எப்போதும் ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்ள திண்டாடுவார். இன்னும் சொல்லப் போனால் ஆஃப் ஸ்பின்னர்களை சரியாக கணிப்பதில் டேவிட் வார்னருக்கு பிரச்சனை இருந்து வந்தது. அதனால் டேவிட் வார்னரின் வீக்னஸை நன்றாக அறிவேன். எப்போதெல்லாம் வார்னர் பேட்டிங் செய்ய களமிறங்குகிறாரோ, அப்போது அஸ்வினுக்கு எதிரான ஸ்டாட்ஸை நினைவுபடுத்திவிடுவேன்.

அவர் எப்படியெல்லாம் விக்கெட்டை கொடுத்துள்ளார் என்பதை பேசுவேன். இதனால் வார்னர் பேட்டிங் செய்யும் போது நான் கூறும் விஷயங்கள் அவரின் தலைக்குள் ஓடி கொண்டே இருக்கும். அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த இப்படியும் ஒரு ட்ரிக் இருந்தது. வார்னரின் இந்த சிக்கல் குறித்து இந்திய அணி வீரர்களிடம் பேசி இருக்கிறேன்.

ஒரு கட்டத்தில் பேட்டிங் செய்யும் போது கூட வார்னரை ஸ்லெட்ஜிங் செய்யும் வாய்ப்பை தவறவிட்டதில்லை. நான் பேட்டிங் செய்யும் போது வார்னர் அருகில் நின்று ஃபீல்டிங் செய்தால், அவர் பக்கம் திரும்புவேன். அவர் என்னை பார்த்தாலே உடனடியாக கொஞ்சம் நகர்ந்து சென்றுவிடுவார் என்று தெரிவித்துள்ளார். புஜாராவின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வார்னரின் விக்கெட்டை மட்டும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 முறை வீழ்த்தி இருக்கிறார். வழக்கமாக இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் அஸ்வின் கில்லாடி என்றாலும், வார்னரின் விக்கெட்டை எளிதாக வீழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 14, 2024, 18:18 [IST]
Other articles published on Dec 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+