Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா அணியை தேர்வு செய்வீங்க.. நான் பார்த்ததிலேயே இது தான் பலவீனமான பந்துவீச்சு!

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் தோல்விக்கு அணித் தேர்வு தான் காரணம் என முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளனர்.

தொடரை இழந்தது

தொடரை இழந்தது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 0-2 என இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் அணித் தேர்வு தான்.

உலகக்கோப்பை அணி

உலகக்கோப்பை அணி

இந்தியா தற்போது உலகக்கோப்பைக்கு தேவையான வீரர்களை அடையாளம் காண்கிறோம், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். இதனால், சில போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்தித்து வருகிறது.

முயற்சி தோல்வி

முயற்சி தோல்வி

இரண்டாவது டி20 போட்டியை பொறுத்தவரை இந்தியா மூன்று முழு நேர பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு ஆல்-ரவுண்டர்கள் கொண்டு களம் இறங்கியது. ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மாற்று பந்துவீச்சாளர் இல்லை

மாற்று பந்துவீச்சாளர் இல்லை

மேலும், இந்தியா சரியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே வைத்துக் கொண்டு ஆடியது. பகுதி நேர பந்துவீச்சாளர்களே அணியில் இல்லை. இதனால், சாஹல், சித்தார்த் கௌல் ரன்களை வாரி வழங்கிய போது, மாற்று பந்துவீச்சாளர் இல்லாமல் திணற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அணி தடுமாறியது

ஆகாஷ் சோப்ரா கூறுகையில் சாஹல் அதிக ரன்கள் கொடுத்த போது இந்தியா வேறு வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறியது என குறிப்பிட்டார். இது டி20 போட்டிகளில் சரி வராத முறை என்றும் அவர் சாடினார்.

பலவீனமான பந்துவீச்சு

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் இந்தியா உலகக்கோப்பையை மனதில் வைத்து அணி தேர்வு செய்கிறது. ஆனால், இது தான் நான் பார்த்ததில் மிக பலவீனமான பந்துவீச்சு கூட்டணி எனக் கூறி க்ருனால் மற்றும் விஜய் ஷங்கர் ஐந்து பந்துவீச்சாளர்களில் இருவராக இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு இது தான்

தீர்வு இது தான்

இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்திய அணி பரிசோதனைகளை நிறுத்திக் கொண்டு ஒருநாள் தொடரிலாவது முழு பலம் கொண்ட அணியை களம் இறக்க வேண்டும். இது பற்றி, கோலி, ரவி சாஸ்திரி தான் முடிவு செய்ய வேண்டும்.

Story first published: Thursday, February 28, 2019, 15:37 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+