Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா ஜாகிங் ஓடுற மாதிரி ஓடி பந்து வீசுறார்.. எதுலயும் அடங்காத பௌலர்.. டென்னிஸ் லில்லி புகழாரம்

கொல்கத்தா : உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டென்னிஸ் லில்லி இந்திய வீரர் பும்ரா பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஆனந்த பஜார் பத்திரிகா என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் டென்னிஸ் லில்லி பும்ரா பற்றியும், இந்திய பந்துவீச்சாளர்கள் பற்றியும் பேசினார்.

அசத்தல் பும்ரா

அசத்தல் பும்ரா

பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக உள்ளார். டெஸ்ட் தரவரிசையிலும் அறிமுகமான ஒரே ஆண்டில் குறைந்த போட்டிகளில் வேகமாக முன்னேறி வருகிறார். இந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

ஜாகிங் ஓடுகிறார்

ஜாகிங் ஓடுகிறார்

அவரது பந்துவீச்சு பற்றி பேசிய டென்னிஸ் லில்லி, "பும்ராவின் பந்துவீச்சு மிக சுவாரஸ்யமானது. அவர் குறைந்த தூரமே ஓடுகிறார். ஜாகிங் போவது போல ஓடி, குறைந்த தூரம் ஓடிய உடனேயே பந்தை வீசுகிறார். அவரது பந்துவீச்சு அடிப்படைகளிலும் அடங்காத ஒன்று" என குறிப்பிட்டார்.

அவரை போல இருக்கிறது

அவரை போல இருக்கிறது

பும்ராவின் பந்துவீச்சு என் காலத்தில் இருந்த வேகப் பந்துவீச்சாளர் ஜெஃப் தாம்சன்-ஐ நினைவு படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார் டென்னிஸ் லில்லி. அவரும் வித்தியாசமான பந்துவீச்சு முறையை கொண்டு இருந்தார் என தெரிவித்தார்.

இந்திய பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டேன்

இந்திய பந்துவீச்சால் ஈர்க்கப்பட்டேன்

மேலும், இந்தியாவில் தற்போது நல்ல பந்துவீச்சாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர்கள் வீசியதை பார்த்து ஈர்க்கப்பட்டேன் எனவும் கூறினார். மெல்போர்ன் டெஸ்டில் இரு அணிகளும் 3 வேகம் + 1 சுழல் கூட்டணியுடன் களம் இறங்க வேண்டும். அப்படி இறங்கினால் அந்த போட்டி பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Story first published: Saturday, December 22, 2018, 13:00 [IST]
Other articles published on Dec 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+