Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தான் ரிஷப் பண்ட்டின் ஹீரோ.. தோனியிடம் தினமும் போனில் பேசுகிறார்.. வெளிவந்த ரகசியம்!

மெல்போர்ன் : இந்திய அணியில் தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என அறியப்படும் ரிஷப் பண்ட், அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.

தோனிக்கு போட்டியாக ரிஷப் பண்ட் உருவாகிறாரா? உலகக்கோப்பையில் தோனியின் இடத்தை எடுத்துக் கொள்வாரா? என்றெல்லாம் விவாதங்கள் நடந்து வரும் வேளையில் பண்ட்டின் ஹீரோ, ரோல் மாடல் எல்லாமே தோனி தான் என தெரிய வந்துள்ளது.

டெஸ்ட் தொடரில் கலக்கிய பண்ட்

டெஸ்ட் தொடரில் கலக்கிய பண்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் தன்னை நிரூபித்தார். போட்டிக்கு போட்டி 30-40 ரன்கள் எடுத்த அவர், கடைசி போட்டியில் அதிரடியாக 159 ரன்கள் அடித்தார். கோலியை விட அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்து இருந்தார் பண்ட்.

ஒருநாள் தொடரில் இடம் இல்லை

ஒருநாள் தொடரில் இடம் இல்லை

அடுத்து ஆஸ்திரேலிய - நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் ரிஷப் பண்ட்டிற்கு இடம் அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தோனி, தினேஷ் கார்த்திக் அணியில் விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்றனர். எனினும், உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.

பண்ட் குறித்த கேள்விகள்

பண்ட் குறித்த கேள்விகள்

இந்நிலையில், தோனி உலகக்கோப்பையில் ஆடிய பின்னர் ஓய்வு பெற்றால் அவர் இடத்திற்கு ரிஷப் பண்ட் சரியாக வருவாரா? என்ற கேள்வி இருந்தது. மேலும், பல ரசிகர்களும் பார்ப்பது போல, ரிஷப் பண்ட், தோனியின் போட்டியாளரா? என்ற கேள்விகளுக்கு ரவி சாஸ்திரியின் தகவல் பதிலாக அமைந்துள்ளது.

ரவி சாஸ்திரி சொன்ன பதில்

ரவி சாஸ்திரி சொன்ன பதில்

ரவி சாஸ்திரி அளித்த பேட்டி ஒன்றில் தோனி குறித்து பேசி இருந்தார். அதில் ரிஷப் பண்ட் தோனியின் இடத்தை நிரப்புவாரா? என்ற கேள்விக்கு, ரிஷப் பண்ட்டிடம் திறமை உள்ளது. அவரது ஹீரோ தோனி தான். தினமும் அவருடன் போனில் பேசுகிறார். அதிலும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் எங்களிடம் பேசியதை விட தோனியிடம் பேசியது தான் அதிகம் என கூறி இருந்தார்.

தோனி வழியில் பண்ட்

தோனி வழியில் பண்ட்

ரவி சாஸ்திரி கூறிய தகவலால் பலரது சந்தேகங்களும் முடிவுக்கு வந்துள்ளன. ரிஷப் பண்ட் தோனியின் வழியை தான் பின்பற்றுகிறார் என தெளிவாக தெரிய வந்துள்ளது.

தெரியாத தகவல்

தெரியாத தகவல்

அதிலும், ரிஷப் பண்ட் தினமும் மணிக்கணக்கில் தோனியிடம் பேசுகிறார் என்பது இதுவரை வெளி உலகிற்கு தெரியாத தகவலாக அமைந்துள்ளது. டெஸ்ட் தொடரில் பல சமயம் ரிஷப் பண்ட் தோனி போலவே பந்துவீச்சாளர்களுக்கு யோசனை கூறினார். அதன் காரணமும் இப்போது புரிகிறது.

Story first published: Saturday, January 19, 2019, 12:20 [IST]
Other articles published on Jan 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+