Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேஸிங்கில் கோலியை முந்திய தோனி.. சிறந்த “சேஸ் மாஸ்டர்” தோனி தான்.. இப்ப என்ன சொல்றீங்க?

Recommended Video

சேஸிங்கில் கேப்டன் கோலியை முந்திய தோனி!- வீடியோ

அடிலெய்டு : ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனி அரைசதம் அடித்தார். இந்த போட்டியின் முடிவில், சேஸிங் செய்வதில் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்ற சாதனை ஒன்றை செய்துள்ளார் தோனி.

சர்வதேச அளவில் வெற்றிகரமான ரன் சேஸிங்-களில் அதிக சராசரி வைத்துள்ள பேட்ஸ்மேன்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தோனி கோலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

கோலி சதம்.. தோனி அரைசதம்

கோலி சதம்.. தோனி அரைசதம்

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 299 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி சதம் அடித்தார். தோனி 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தோனி அதிக சராசரி

தோனி அதிக சராசரி

இந்த போட்டியையும் சேர்த்து இந்திய அணியின் வெற்றிகரமான ரன் சேஸ்-களில் தோனி 72 இன்னிங்க்ஸ்களில் 2696 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 99.85 ஆகும். சர்வதேச அளவில் இதுவே அதிகமான சராசரி ஆகும்.

கோலி அடுத்த இடம்

கோலி அடுத்த இடம்

இதே வெற்றிகரமான ரன் சேஸ்களில் கோலி 77 இன்னிங்க்ஸ்களில் 4853 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 99.04 ஆகும். இதன் மூலம் சராசரியில் மிகச் சிறிய வித்தியாசத்தில் தோனியை விட பின்தங்கி உள்ளார் கோலி.

அதிக சராசரி எப்படி?

அதிக சராசரி எப்படி?

தோனி குறைந்த ரன்களே அடித்து இருந்தாலும், பல போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று போட்டியை வென்று கொடுத்துள்ளார். அதனால், அவரது சராசரி அதிகமாக உள்ளது. கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்கி ஆடுவதால், அதிக ரன்கள் அடித்தும் விக்கெட்டை இழந்த காரணத்தால் சராசரி தோனியை விட குறைவாக உள்ளது.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

உலகளவில் வெற்றிகரமான ரன் சேஸ்களில் அதிக சராசரி வைத்துள்ள பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தோனி (99.85) முதல் இடத்திலும், கோலி (99.04) இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய அணியின் மைக்கேல் பெவன் (86.25) மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் (82.77) இருக்கின்றனர்.

தோனி நிரூபித்தார்

தோனி நிரூபித்தார்

தோனி கடந்த ஆண்டு முழுவதும் சரியாக பேட்டிங் செய்யாமல் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், 2019இன் துவக்கம் முதலே அதிரடியாக இரண்டு சதங்கள் அடித்து தன் பேட்டிங் திறனை நிரூபித்துள்ளார். தோனி முன்பு போல அதிக பவுண்டரிகள் அடிக்காவிட்டாலும், தன்னால் ரன் குவிக்க முடியும் என காட்டியுள்ளார்.

Story first published: Wednesday, January 16, 2019, 12:24 [IST]
Other articles published on Jan 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+