Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், கங்குலி, டிராவிட் லிஸ்டில் 4வதாக சேர்ந்த தோனி.. அப்படி என்ன சாதனை செஞ்சாரு?

ஹைதராபத்: தோனி சத்தமில்லாமல் ஒரு புதிய சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.

லிஸ்ட் ஏ கிரிக்கெட் எனப்படும் சர்வதேச மற்றும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் தோனி புதிய மைல்கல் சாதனை செய்து, சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ரன்கள் மூலம் லிஸ்ட் ஏ போட்டிகளில் தோனி 13,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துள்ளார்.

நான்காவது வீரர்

நான்காவது வீரர்

இந்திய அளவில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே லிஸ்ட் ஏ போட்டிகளில் 13,000 ரன்களை கடந்துள்ளனர். இந்த முக்கிய பட்டியலில் தோனி நான்காவதாக இணைந்துள்ளார்.

தோனி எடுத்த ரன்கள்

தோனி எடுத்த ரன்கள்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் சேர்த்து தோனி 412 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி, 13,054 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 50.79 என்பது குறிப்பிடத்தக்கது.

விரட்டி வரும் கோலி

விரட்டி வரும் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 13,000 ரன்கள் என்ற இலக்கை எட்ட இன்னும் 981 ரன்கள் மட்டுமே தேவை. கோலி தற்போது 257 லிஸ்ட் ஏ போட்டிகளில் 12,019 ரன்கள் எடுத்துள்ளார்.

சிக்ஸர் சாதனை

சிக்ஸர் சாதனை

தோனி முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் செய்தார். ரோஹித் சர்மாவை முந்தி முதல் இடத்தை பிடித்தார் தோனி. தோனி தற்போது 216 ஒருநாள் போட்டி சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

Story first published: Monday, March 4, 2019, 15:17 [IST]
Other articles published on Mar 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+