Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொந்த ஊரில் இந்திய அணிக்கு செம காஸ்ட்லி டின்னர் பார்ட்டி கொடுத்த தோனி! எதுக்கு தெரியுமா?

ராஞ்சி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆடுவதற்காக இந்திய அணி ராஞ்சி சென்றுள்ளது.

தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்திய அணிக்கு சிறப்பு இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார் தோனி.

டிரைவர் தோனி

இந்திய அணி ராஞ்சி விரைந்த போது தோனி வீரர்களை ஏற்றிக் கொண்டு தானே காரை ஓட்டிச் சென்றார். தன் ஊரில் சக அணி வீரர்களை விருந்தினர்களாக கவனித்துக் கொண்டார் தோனி.

கண்ணைக் கவரும் விருந்து

கண்ணைக் கவரும் விருந்து

அடுத்து தன் பண்ணை வீட்டில் வைத்து இந்திய அணியினர் அனைவருக்கும் பெரிய அளவில் இரவு விருந்து அளித்தார். தோனி, மற்றும் அவரது மனைவி சாக்ஷி ராவத் மேற்பார்வையில் கண்ணைக் கவரும் வகையில் நடந்து முடிந்தது இந்த விருந்து.

பிரம்மாண்டமான விருந்து

பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்ட பெரிய அறையில் நடந்த இந்த விருந்தின் புகைப்படத்தை சாஹல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்தாலே லட்சக்கணக்கில் செலவு செய்திருப்பார்கள் என தெரிகிறது.

ஏன் இந்த விருந்து?

ஏன் இந்த விருந்து?

இப்போது ஏன் இந்த பிரம்மாண்ட விருந்து? தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால், தோனி தன் சொந்த ஊரில் விளையாட உள்ள கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி இது தான். அதை ஒட்டி தான் இந்த பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடரை வெல்லுமா?

தொடரை வெல்லுமா?

இந்திய அணி, தோனி அளித்த விருந்தின் உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது போட்டியில் வீழ்த்தும் பட்சத்தில் ஐந்து போட்டிகள் கோடன தொடரை 3-0 என நேரடியாக கைப்பற்ற முடியும்.

Story first published: Thursday, March 7, 2019, 15:59 [IST]
Other articles published on Mar 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+