
பரபர சேஸிங்
இந்திய அணி 299 ரன்களை சேஸ் செய்தது. அப்போது கடைசி நேரத்தில் கோலி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 38 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. தினேஷ் கார்த்திக், தோனி இணைந்து பேட்டிங் ஆடி வந்தனர். அப்போது தண்ணீர் கொடுக்க சாஹல் மற்றும் கலீல் அஹ்மது வந்தனர்.
பிட்ச் மீது நடந்த கலீல்
கலீல் அஹ்மது பிட்ச் மீது நடந்து வந்து தண்ணீர் கொடுத்தார். பிட்ச் மீது கலீல் நடந்ததை கண்ட தோனி, உடனே கையை உயர்த்தி அவரை திட்டினார். காரணம், பிட்ச் மீது நடந்தால், பிட்ச்'சை சேதப்படுத்தியதற்காக அம்பயர் எச்சரிக்கை அல்லது பெனால்டி கொடுக்க வாய்ப்புள்ளது.

புதிய வீரர் கலீல்
கலீல் அஹ்மது சர்வதேச போட்டிகளுக்கு புதிய வீரர். இதுவரை ஏழு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். அதனால், தன்னை அறியாமல் இந்த தவறை செய்து இருக்கலாம். ஆனால், தோனி இப்படி திட்டுவார் என அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தோனியிடம் திட்டு வாங்கிய வீரர்கள்
இந்த வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு வேகமாக பரவி வருகிறது. சிலர் தோனி என்ன வார்த்தை கூறி திட்டினார் என விவாதம் நடத்தி வருகிறார்கள். தோனி இது போல கோபமடைவது மிக அபூர்வமே. கடந்த வருடம் குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே ஆகியோரை தோனி திட்டியதாக சில வீடியோக்கள் வலம் வந்த நிலையில் தற்போது கலீல் அஹ்மது வீடியோ வந்துள்ளது.

வெற்றி ரன்கள்
இந்த சம்பவம் நடந்த பின்னர் தோனி - தினேஷ் கார்த்திக் களத்தில் கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். தோனி 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து கலக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் ஓடி


Click it and Unblock the Notifications












