For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் போட்டியில் தடுமாறினார்.. அடுத்த போட்டியில் வேற மாதிரி மாறிட்டார்.. தோனியை புகழ்ந்த சச்சின்!

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாம் போட்டியில் தோனி அரைசதம் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார்.

தோனி இதற்கு முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்து இருந்தாலும் அதிக பந்துகளை வீணடித்ததாக புகார் எழுந்தது. இரண்டு போட்டிகளிலும் தோனியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார் சச்சின்.

96 பந்துகளில் 51 ரன்கள்

96 பந்துகளில் 51 ரன்கள்

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 289 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது பேட்டிங் செய்ய வந்தார் தோனி. அப்போது விக்கெட் விழாமல் ஆட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அந்த போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தோனி.

இரண்டாம் போட்டியிலும் அரைசதம்

இரண்டாம் போட்டியிலும் அரைசதம்

இரண்டாம் போட்டியில் 299 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் கோலி 104 ரன்கள் அடிக்க, தோனி கடைசி வரை நின்று 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

மாறினார் தோனி

மாறினார் தோனி

முதல் போட்டியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் போட்டியில் தோனியின் பேட்டிங்கில் பெரிய வித்தியாசம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் சச்சின். முதல் போட்டியில் தோனி தன் இயல்பில் இல்லை. தான் நினைத்த இடத்தில் பந்தை அடிக்க முடியாமல் திணறினார். ஆனால், இரண்டாம் போட்டியில் தோனி முதல் பந்தில் இருந்தே வேறு ஒரு வீரர் போல இருந்ததாக கூறினார் சச்சின்.

கட்டுப்படுத்தும் ஆற்றல்

கட்டுப்படுத்தும் ஆற்றல்

மேலும், தோனி பேட்டிங்கில் ஒரு பக்கம் நின்று கொண்டு போட்டியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர் எனவும் புகழ்ந்தார் சச்சின். தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் தடுமாறி வந்த நிலையில், 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து ஆடிய இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

Story first published: Thursday, January 17, 2019, 18:00 [IST]
Other articles published on Jan 17, 2019
English summary
India vs Australia : Dhoni look like changed player in 2nd ODI says Sachin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+