Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யப்பா சாமி! சீக்கிரம் பந்தை பிடிங்க.. இல்லன்னா கதை கட்டிடுவாங்க!! சிரித்துக் கொண்டே பதறிய தோனி!!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

தோனி, கேதார் ஜாதவ் கடைசி வரை களத்தில் நின்று அந்த போட்டியில் வெற்றி தேடித் தந்தனர். போட்டி முடிந்த பின் தோனி சொன்ன வேடிக்கையான ஒரு விஷயம் படு வேகமாக இணையத்தில் பரவி வருகிறது. அப்படி என்ன சொன்னார் தோனி?

மோசமான ஆண்டு எது?

மோசமான ஆண்டு எது?

தோனி 2018ஆம் ஆண்டு பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் மோசமான ஆண்டு எது என்றால் 2018 என எளிதாக கூறலாம். 20 போட்டிகளில் வெறும் 275 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் தோனி.

டாப் பார்மில் தோனி

டாப் பார்மில் தோனி

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு துவக்கத்தில் முதல் 3 போட்டிகளில் 3 அரைசதம் அடித்து டாப் பார்மில் ஆண்டை துவக்கி உள்ளார். இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியின் முடிவில் பந்தை கையில் எடுத்துக் கொண்டு வெளியே தோனி, பந்தை துணை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் கொடுத்தார்.

சீக்கிரம் வாங்குங்க

சஞ்சய் பங்கரிடம் பந்தை கொடுத்த தோனி, "சீக்கிரம் பந்தை வாங்கிக்கங்க. இல்லன்னா தோனி ரிடையர் ஆகப் போறார்னு சொல்லிடுவாங்க" எனக் கூறினார். இதைக் கேட்ட பங்கர் சிரித்துக் கொண்டே பந்தை வாங்கிச் சென்றார்.

இங்கிலாந்தில் நடந்தது என்ன?

இங்கிலாந்தில் நடந்தது என்ன?

தோனி ஏன் இப்படி சொன்னார்? என சிலர் நினைக்கலாம். கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் தோனி மோசமாக பேட்டிங் ஆடினார் என விமர்சனம் எழுந்து வந்த நிலையில், அந்த தொடரின் கடைசி போட்டியின் முடிவில் தோனி இதே போல பந்தை கையில் எடுத்துக் கொண்டு வந்தார்.

தோனி ஓய்வு கட்டுக்கதை

தோனி ஓய்வு கட்டுக்கதை

அப்போது, இணையத்தில் தோனி ஓய்வு பெறப் போகிறார். அதனால் தான் தன் கடைசி போட்டியில் பயன்படுத்திய பந்தை எடுத்துக் கொண்டு செல்கிறார் என கதை கட்டி விட்டார்கள். பின்னர் இதில் உண்மையில்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தார்.

இடம் உறுதி

இடம் உறுதி

இதை தான் தோனி தற்போது நினைவு கூர்ந்து சஞ்சய் பங்கரிடம் கூறியுள்ளார். மேலும், தோனி தற்போது செம பார்முக்கு வந்துள்ளதால் 2019 உலகக்கோப்பை வரை தோனி அணியில் இடம் பெறுவது எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதியாகி உள்ளது.

Story first published: Saturday, January 19, 2019, 16:56 [IST]
Other articles published on Jan 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+