தோனிக்கும் அடி சறுக்கும்.. கேட்சை கோட்டை விட்டார்! உண்மையா என்ன நடந்துச்சு தெரியுமா?
விசாகப்பட்டினம் : தோனி எப்போதும் பேட்ஸ்மேன் மனதை சரியாக படித்து விடுவார். அதே போல, பந்துவீச்சையும் எப்படி வீசலாம், எந்த திசையில் வீசலாம் என ஆலோசனை கூறி பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்த காரணமாக இருப்பார்.
ஆனால், தோனியும் சிறிய அளவில் அடி சறுக்கி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மார்கண்டே பந்து வீசினார்
முதல் டி20 போட்டியில் இந்தியா முதலில் 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது அறிமுக வீரர் மாயங்க் மார்கண்டே 15 ஓவரில் பந்து வீசினார்.

எட்ஜ் ஆனது
அப்போது, பேட்டிங் செய்த ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கண்டே வீசிய பந்து தரையில் பிட்ச் ஆகி எந்த திசையில் செல்லும் என கணிக்க முடியாமல் திணறினார். அதனால், பந்து, பேட்டில் பட்டு எட்ஜ் ஆனது.

தோனி கேட்ச்சை விட்டார்
விக்கெட் கீப்பிங் செய்து வந்த தோனி, பந்தை முதலில் கணிக்க தவறினாலும், பந்து பிட்ச் ஆன பின் சரியாக கணித்து, இடது பக்கம் நகர்ந்தார். எனினும், பந்து எட்ஜ் ஆனதால் தோனியால் அந்த பந்தை பிடிக்க முடியவில்லை.

ரசிகர்கள் குற்றம்
இதனால், தோனி ஒரு கேட்ச்சை கோட்டை விட்டார். எனினும், மிஸ்டரி சுழற் பந்துவீச்சாளர் என அறியப்படும் மார்கண்டே பந்தை தோனி ஓரளவு கணித்தார் என்றாலும், ரசிகர்கள் பலர் தோனி கேட்சை விட்டார் என்பதை மட்டுமே கூறி வருகின்றனர்.

இடம் கடினமே!
மார்கண்டே தன் முதல் சர்வதேச டி20 போட்டியில் சற்று மோசமாகவே பந்து வீசினார். 4 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்த அவர், ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இரண்டாவது டி20 போட்டியில் மார்கண்டே அணியில் இடம் பிடிப்பது கடினமே.


Click it and Unblock the Notifications