Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி செஞ்சுட்டீங்களே தோனி!! மோசமான லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்த “நிதான” தோனி!

Recommended Video

மோசமான பதிவில் இரண்டாம் இடம் பிடித்த தோனி!- வீடியோ

விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20யில் தோனி மோசமான பதிவு ஒன்றை செய்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தோனி நிதானம்

தோனி நிதானம்

இந்திய அணியில் ராகுல் 50, கோலி 24 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர். அப்போது தோனி மட்டுமே களத்தில் நின்று நிதானமாக ரன் குவித்தார்.

ஒரே ஒரு சிக்ஸ்

ஒரே ஒரு சிக்ஸ்

9வது பேட்ஸ்மேன் சாஹலுடன் பேட்டிங் செய்த போது தோனி ஒற்றை ரன்கள் ஓடாமல் தானே ஸ்ட்ரைக்கில் நிற்க முயற்சி செய்தார். அதே சமயம், அவரால் பவுண்டரி அடிக்கவும் முடியவில்லை. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தது மட்டுமே தோனியின் ஒரே பவுண்டரி ஆகும்.

தோனி ஸ்ட்ரைக் ரேட்

தோனி ஸ்ட்ரைக் ரேட்

இதனால், கடைசி மூன்று ஓவர்களில் இந்தியா அதிக ரன் குவிக்காமல் போனது. பெரிய இலக்கையும் எட்ட முடியவில்லை. தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதன் ஸ்ட்ரைக் ரேட் 78.37 ஆகும்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

இந்த பொறுமையான பேட்டிங் மூலம், டி20யில் 35 பந்துகளுக்கும் மேல் சந்தித்து குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த இந்திய பேட்ஸ்மேன்களில் இரண்டாம் பிடித்துள்ளார். இத்தனைக்கும் தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் யார்?

முதலிடத்தை பிடித்த அந்த இந்திய பேட்ஸ்மேன் யார் தெரியுமா? நம்ம ரவீந்திர ஜடேஜா தான். 2009இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் ஜடேஜா 71.42 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். அந்த போட்டியில் 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தார்.

Story first published: Monday, February 25, 2019, 11:29 [IST]
Other articles published on Feb 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+