For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புது வருடத்தில் தோனியின் தரமான சம்பவங்கள் ஆரம்பம்! பேட்டிங்கில் கோலி, ரோஹித்தை ஓரங்கட்டினார்!!

மெல்போர்ன் : தோனி கடந்த 2018இல் மிக மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

ஆனால், 2019இன் துவக்கத்திலேயே கலக்க ஆரம்பித்துள்ளார் தோனி. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து பட்டையைக் கிளப்பினார்.

தோனியின் பேட்டிங் பார்ம்

தோனியின் பேட்டிங் பார்ம்

கடந்த 2018ஆம் ஆண்டு தோனி 20 ஒருநாள் போட்டிகளில் 275 ரன்கள் மட்டுமே அடித்தார். பேட்டிங்கில் ரன் குவிக்கும் வேகமும் மிகவும் குறைந்தது. இதனால், இதுவரை இல்லாத அளவு தோனி குறித்த விமர்சனங்கள் அதிகரித்தன.

விமர்சனங்கள் வலம் வந்தன

விமர்சனங்கள் வலம் வந்தன

தோனி உலகக்கோப்பை வரை மட்டுமே ஆடவுள்ளார், அவரது அனுபவம் மட்டுமே அவரை அணியில் வைத்துள்ளது, அவருக்கு வயதாகி விட்டது என ஏராளமான பேச்சுக்கள், விமர்சனங்கள் வலம் வந்தன.

ஒன்றல்ல, மூன்று

ஒன்றல்ல, மூன்று

தோனி ரசிகர்கள் அவர் ஒரு அரைசதம் அடித்தால் கூட போதுமே, விமர்சனம் செய்யும் நபர்களுக்கு பதில் சொன்னது போல ஆகி விடும் என காத்திருந்தனர். 2019இல் அந்த ரசிகர்களை குஷிப்படுத்திய தோனி, ஒன்றல்ல, மூன்று அரைசதங்களை வருடத்தின் முதல் மூன்று போட்டிகளில் அடித்து கலக்கி உள்ளார்.

தோனி அதிகம்

தோனி அதிகம்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்து கோலி, ரோஹித் அடித்த ரன்களை விட அதிக ரன்கள் அடித்து தன் பேட்டிங் திறனை காட்டினார் தோனி. தோனி மூன்று போட்டிகளிலும் சேர்த்து 193 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனி அதிக ரன்கள்

தோனி அதிக ரன்கள்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் ஆஸி. அணியின் ஷான் மார்ஷ். இவர் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்து 224 ரன்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் தோனி 3 அரைசதங்களுடன் 193 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு நாட்-அவுட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் - கோலி பின்னே

ரோஹித் - கோலி பின்னே

மூன்றாம் இடத்தில் ரோஹித் ஒரு சதத்துடன் 185 ரன்களும், நான்காம் இடத்தில் கோலி ஒரு சதத்துடன் 153 ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் கோலி, ரோஹித் சர்மாவை விட அதிக ரன்கள் எடுத்து, போட்டிக்கு போட்டி ரன் குவித்து தோனி கலக்கி உள்ளார்.

Story first published: Friday, January 18, 2019, 17:50 [IST]
Other articles published on Jan 18, 2019
English summary
India vs Australia : Dhoni’s big change in 2019 with 3 fifities in 3 matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+