For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவில் ஒலிக்கும் தோனி புகழ்.. ஆஸி வீரர்கள் புகழ் மழை.. ஏன் தெரியுமா?

சிட்னி : ஆஸ்திரேலிய மண்ணில் தோனி கடைசியாக ஆட உள்ள கிரிக்கெட் தொடர் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

மேலும், சிட்னியில் இந்திய அணியின் பயிற்சியை காண வந்த ரசிகர்கள் தோனியுடன் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர்.

தோனி புகழ்

தோனி புகழ்

தோனி 2019 உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் கடந்த சில மாதங்களாகவே வலம் வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், தோனி ஆஸ்திரேலியாவில் ஆடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தோனி புகழ் ஒலிக்கத் துவங்கி உள்ளது.

டிம் பெய்ன் பாராட்டு

டிம் பெய்ன் பாராட்டு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், "தோனி கிரிக்கெட் ஆடியவர்களில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன். குறைந்த ஓவர் போட்டிகளில் தோனி தான் பெஸ்ட்" எனக் குறிப்பிட்டார்.

லட்சிய மனிதர்

லட்சிய மனிதர்

ஆஸி. அணியின் வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், தோனி எந்த சூழ்நிலையில் இருந்தும் போட்டியை வெற்றி பெற வைத்து விடுவார். அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தால் மிக அமைதியாக இருப்பார். 100 கோடி இந்திய மக்களின் லட்சிய மனிதர் என கூறினார்.

ஒளி காட்டும் விளக்கு

ஒளி காட்டும் விளக்கு

இதே போன்று ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா என தோனியை அத்தனை ஆஸ்திரேலிய வீரர்களும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்திய வீரர் ரோஹித் சர்மாவும் தோனியை புகழ்ந்து பேசி இருந்தார். தோனி தான் இந்திய அணிக்கு ஒளி காட்டும் விளக்கு என கூறினார் ரோஹித்.

தோனி பயிற்சி

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சிட்னியில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் தோனி. தோனியின் பயிற்சியை காண எராளமான இந்திய ரசிகர்கள் சிட்னியில் கூடி இருந்தனர். அவர்களோடு செல்பி எடுத்து மகிழ்ந்தார் தோனி.

தோனி பேட்டிங்

தோனி பேட்டிங்

தோனியை பொறுத்தவரை பேட்டிங்கில் கடந்த ஆண்டில் சொதப்பினார். அதை மட்டும் மாற்றி தன் கடைசி சில ஒருநாள் போட்டிகளில் பட்டையைக் கிளப்பினால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கு சென்று விடுவார்கள். அது நாளை சிட்னி ஒருநாள் போட்டியில் நடக்குமா?

Story first published: Friday, January 11, 2019, 16:49 [IST]
Other articles published on Jan 11, 2019
English summary
India vs Australia : Dhoni’s last tour in Australia as Aussie players are praising MSD
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+