Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டியில் தோனி பொறுமையா தான் ஆடினார்.. ஆனா அதுக்கு ஒரு காரணம் இருக்கு!!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இந்த போட்டியில் தோனி கடைசி வரை களத்தில் நின்று 87 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் தோனி அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். தோனி மூன்றாவது போட்டியில் தன் அனுபவத்தை பயன்படுத்தி, திட்டமிட்டு இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். என்ன செய்தார் என பார்க்கலாம்.

மெல்போர்ன் எப்படி?

மெல்போர்ன் எப்படி?

மெல்போர்ன் மைதானத்தில் பந்து மெதுவாகவே செல்லும் என்பதால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை அடைய இந்திய அணி பொறுமையாக ஆட முடிவு செய்தது. இந்திய அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் பொறுமையாக ரன் சேர்த்தனர்.

நிதான ஆட்டம்

நிதான ஆட்டம்

ரோஹித் 9, தவான் 23 ரன்களில் வெளியேறினர். அப்போது இந்தியா 16.2 ஓவர்களில் 56 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. அதன் பின் கோலி - தோனி சேர்ந்து அணியை மீட்டனர். இருவரும் நிதானமாக ரன் குவித்தனர். கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி, ஜாதவ் இணை

தோனி, ஜாதவ் இணை

பின்னர் தோனி, ஜாதவ் இணைந்து இறுதி வரை ஆடினர். அவர்கள் கடைசி நேரத்தில் விக்கெட் விழாமல் இருக்க நிறைய பந்துகளை வீணடித்தனர். அதே சமயம், முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவர்கள் முடிவதால், எப்படியும் கடைசி நேரத்தில் சமாளிக்கலாம் என உறுதியாக இருந்தார் தோனி.

எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன?

எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன?

குறிப்பாக, 46வது ஓவரின் முடிவில் சிறிய இடைவேளை விடப்பட்டது. அப்போது தோனி விரைந்து சென்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன என அம்பயரின் கையில் இருந்த குறிப்பில் பார்த்து தெரிந்து கொண்டார்.

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவர் வெற்றி

அதே போல கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாதவ் 61, தோனி 87 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

எல்லாவற்றிலும் திட்டம்

எல்லாவற்றிலும் திட்டம்

தோனி கடைசி நேரம் வரை போட்டியை இழுத்து செல்வதை சிலர் குறை கூறினாலும், தோனி அதிலும் ஒரு திட்டம் போட்டு தான் செயல்படுகிறார். அதிலும் குறிப்பாக, எதிரணி கேப்டன் எந்த பந்துவீச்சாளரை அடுத்து இறக்குவார் என சிந்தித்து செயல்பட்டுள்ளார்.

தொடர் நாயகன் தோனி

தொடர் நாயகன் தோனி

தோனி இந்த தொடரின் 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். இது அவர் வெல்லும் 7வது தொடர் நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 19, 2019, 11:24 [IST]
Other articles published on Jan 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+