Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2019-ஐ சிறப்பாக துவக்கிய தோனி.. அம்பயர் தப்பா அவுட் கொடுக்கலைனா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்

சிட்னி : தோனி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடந்துள்ளார்.

தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நீண்ட காலம் கழித்து அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் ஒரு ரன்னை கடந்த போது தோனி இந்திய அணிக்க 10,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை செய்தார்.

எத்தனை ரன்கள் எடுத்து இருந்தார்?

எத்தனை ரன்கள் எடுத்து இருந்தார்?

தோனி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆடும் முன்பு ஒருநாள் போட்டிகளில் 10,173 ரன்கள் அடித்து இருந்தார். இதில் 174 ரன்கள் ஆசிய அணிக்காக எடுத்த ரன்கள் ஆகும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

இதையடுத்து, இந்திய அணிக்காக தோனி 10,000 ரன்களை அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஏற்பட்டது. ஆனால், அந்த தொடரில் தோனி இந்த இலக்கை எட்ட வாய்ப்பு ஏற்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முடிவில் சரியாக இந்திய அணிக்கு 9,999 ரன்கள் அடித்து இருந்தார் தோனி.

பத்தாயிரம் மைல்கல்

பத்தாயிரம் மைல்கல்

அடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்ற தோனி முதல் போட்டியில் ஒரு ரன்னை கடந்த போது 10,000 ரன்களை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டும் ஐந்தாவது இந்தியர் ஆவார் தோனி. இதற்கு முன் சச்சின், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோர் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இந்தியர்களாக இருந்தனர்.

அரைசதம் அடித்த தோனி

அரைசதம் அடித்த தோனி

தோனி நீண்ட காலமாக பார்ம் அவுட்டில் இருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் அரைசதம் அடித்தார் தோனி. இந்தியா 4 ரன்களில் 3 விக்கெட்கள் இழந்த நிலையில் களமிறங்கிய தோனி நிதானமாக ஆடினார். 96 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

சுமார் 13 மாதங்கள்

சுமார் 13 மாதங்கள்

தோனி கடைசியாக டிசம்பர் 2017இல் தான் 50+ ரன்களை எடுத்திருந்தார். 13 மாதங்கள் கழித்து அரைசதம் அடித்து 2019 ஆண்டை வெற்றிகரமாக துவக்கி உள்ளார் தோனி. 2018 ஆண்டு முழுவதும் சேர்த்தே தோனி 275 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். இந்த நிலையில் 2019இல் ஒரே போட்டியில் 51 ரன்கள் அடித்து ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

தோனி அவுட்டே இல்லை

தோனி அவுட்டே இல்லை

இதில் மற்றொரு விஷயம் தோனியின் சர்ச்சைக்குரிய விக்கெட் வீழ்ச்சி தான். தோனி அவுட்டான எல்.பி.டபுள்யூ பந்தின் ரீப்ளேவில் பந்து அவுட்சைட் திசையில் செல்வது தெரிந்தது. எனினும், ரிவ்யூ இல்லாத நிலையில் தோனி அம்பயர் முடிவை ஏற்று வெளியேறினார்.

அதிக பந்துகள்

அதிக பந்துகள்

ஏற்கனவே, தோனி பந்துகளை வீணடிக்கிறார் என்ற புகார் இருக்கும் நிலையில், தோனி 90+ பந்துகளை எடுத்துக் கொண்டு அரைசதம் எட்டியதும் விமர்சனத்துக்கு உள்ளாகுமா? ஒருவேளை அம்பயர் தவறாக அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் தோனி இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கவும் வாய்ப்பு இருந்தது.

Story first published: Saturday, January 12, 2019, 15:55 [IST]
Other articles published on Jan 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+