Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வில் சிறப்பான, தரமான சம்பவம் செய்யணும் சாமி!! பூஜையை போட்ட தோனி! சம்பவம் நடக்குமா?

Recommended Video

ஆஸி.வில் சிறப்பான சம்பவம் செய்யணும் சாமி!!.. பூஜையை போட்ட தோனி- வீடியோ

ராஞ்சி: தோனி அடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். அதை தொடர்ந்து தன் சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள கோயிலில் பூஜைகள் செய்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல்-இல் தோனிக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. எனினும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ரன் குவிக்க திணறினார் தோனி. இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில், தோனி ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக ஆண்டை துவக்குவாரா?

டி20 அணியில் இடம் மறுப்பு

டி20 அணியில் இடம் மறுப்பு

தோனி வரும் 2019 உலகக்கோப்பை போட்டிகளுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், டி20 அணியில் அடுத்த விக்கெட் கீப்பரை தேடுவதாக கூறி தோனிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அடுத்து ஒருநாள் தொடர்

அடுத்து ஒருநாள் தொடர்

எனினும், நியூசிலாந்து டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் ஆட உள்ளார். முதலில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். முதல் ஒருநாள் போட்டி வரும் 12 ஜனவரி அன்று நடைபெற உள்ளது.

கோவிலுக்கு சென்று வழிபாடு

தோனி ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் தொடருக்கு செல்லும் முன்பும் தன் சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் தியோரி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம் என கூறப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்களுக்கு முன்னதாக அவர் அந்த கோவிலுக்கு சென்று வழிபாடுகள் மேற்கொண்டுள்ளார்.

அதிரடியை காட்ட வேண்டும்

அதிரடியை காட்ட வேண்டும்

2019 உலகக்கோப்பைக்கு முன்பாக தோனி ஆடவுள்ள கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ஆஸி. - நியூசி. தொடர்கள் மட்டுமே. கடந்த ஆண்டு போல இல்லாமல் தோனி தன் கடைசி சில சர்வதேச போட்டிகளிலாவது அதிரடியை காட்ட வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிறப்பான, தரமான சம்பவம்

சிறப்பான, தரமான சம்பவம்

தோனி ஆஸ்திரேலியாவில் சிறப்பான, தரமான சம்பவத்தை பேட்டிங்கில் நிகழ்த்தினால் மட்டுமே உலகக்கோப்பை தொடருக்கு எந்த அழுத்தமும் இன்றி செல்ல முடியும். மேலும், தோனிக்கு அணிக்குள் போட்டிகளும் உண்டு.

தினேஷ் கார்த்திக் இருக்கிறார்

தினேஷ் கார்த்திக் இருக்கிறார்

என்னதான் தோனி மூத்த வீரர் என்ற அனுபவ அடிப்படையில் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துவிடுவார் என்றாலும், தினேஷ் கார்த்திக் ஒருநாள் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டதை வைத்துப் பார்த்தால், தோனிக்கு லேசாக சிக்கல் இருப்பது போல தான் இருக்கிறது.

ரசிகர்களின் ஆசை என்ன?

அணிக்கு தான் பாரமாக இல்லை என்பதை நிரூபிக்க ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை தோனி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தரமான சம்பவத்தை நிகழ்த்த வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசை.

Story first published: Monday, January 7, 2019, 18:31 [IST]
Other articles published on Jan 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+