For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் நாயகன் விருது வென்று புதிய சாதனை செய்த தோனி.. கவாஸ்கரை பின் தள்ளினார்!!

மெல்போர்ன் : தோனி அதிரடியாக தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இந்த தொடர் நாயகன் விருதில் பல சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளது. தோனி பார்ம் அவுட் என பலரும் கூறி வந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து தொடர் நாயகன் விருதை அந்த பேச்சுக்களுக்கு பதிலது கொடுத்துள்ளார். இதில் உள்ள சுவாரஸ்யங்கள் என்ன?

அதிக வயதில் தொடர் நாயகன்

அதிக வயதில் தொடர் நாயகன்

இந்திய வீரர்களில் மிக அதிக வயதில் தொடர் நாயகன் விருதை வென்றவர் தோனி தான். மூன்றாவது போட்டி அன்று தோனியின் வயது 37 ஆண்டுகள் 195 நாட்கள் ஆகும். இந்த சாதனையை நான்கு நாள் வித்தியாசத்தில் செய்துள்ளார் தோனி.

கவாஸ்கர் நான்கு நாட்கள் பின்னே

கவாஸ்கர் நான்கு நாட்கள் பின்னே

தோனிக்கு முன் அதிக வயதில் தொடர் நாயகன் விருது வென்றவர் கவாஸ்கர். அவர் 37 வருடம் 191 நாட்கள் இருக்கும் போது தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார். தற்போது 4 நாட்கள் வித்தியாசத்தில் தோனி அவரை பின் தள்ளியுள்ளார்.

ஏழு வீரர்கள் ஏழு முறை

ஏழு வீரர்கள் ஏழு முறை

ஒருநாள் போட்டிகளில் ஏழாவது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் தோனி. தோனியுடன் சேர்த்து ஏழு வீரர்கள் சர்வதேச அளவில் ஏழு முறை இதை வென்றுள்ளனர். அதில் இந்திய வீரர்கள் கோலி, யுவராஜ் சிங் மற்றும் கங்குலி ஆகியோரும் அடக்கம்.

2011க்கு பின் 2019

2011க்கு பின் 2019

கடைசியாக 2011இல் தோனி தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார். தற்போது பல ஆண்டுகள் கழித்து தன் பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், மூன்று தொடர் சதங்கள் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் தோனி.

பேட்டிங் திறனை மீட்டார்

பேட்டிங் திறனை மீட்டார்

தோனி உலகக்கோப்பை வரை மட்டுமே ஆடுவார். அதற்குள் எப்படியாவது பார்முக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பிய நிலையில், அதிரடியாக தோனி தன் பேட்டிங் திறனை மீட்டுள்ளார்.

பவுண்டரி இல்லை

பவுண்டரி இல்லை

தோனி முன்பு போல பவுண்டரி, சிக்ஸ் என தெறிக்க விடாமல் போனாலும், களத்தில் நங்கூரம் போட்டது போல நின்று அணியை இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார். முதல் போட்டியில் கூட தவறான அம்பயர் முடிவால் தான் தோனி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, January 19, 2019, 13:24 [IST]
Other articles published on Jan 19, 2019
English summary
India vs Australia : Dhoni won 7th Man of the series award at Australia. Here are some of the stats related to it.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X