Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. கேப்டனை பார்த்து இப்படி சொன்னாரா கோலி? வெடிக்கும் புது சர்ச்சை.. மறுக்கும் பிசிசிஐ

பெர்த்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் பெரிய அளவில் இந்திய வீரர்களை சீண்டவில்லை.

மாறாக, இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னை நோக்கி கடுப்பேத்தும் வகையில் களத்தில் பேசி வருகிறார். இது இப்போது வேறு ஒரு வகையில் பிரச்சனையாக மாறியுள்ளது. என்ன பிரச்சனை?

சீண்டும் கோலி

சீண்டும் கோலி

முதல் டெஸ்டில் சீண்டாமல் அமைதியாக இருந்த கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாளில் இந்தியா பின்னடைவை சந்தித்த பின்னர் ஆஸ்திரேலிய கேப்டனை சீண்ட ஆரம்பித்தார். அந்த சமயத்தில் இருந்து இருவரும் களத்தில் இருந்தாலே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

வம்புக்கு போகும் கோலி

வம்புக்கு போகும் கோலி

கோலி டிம் பெய்ன்-ஐ வம்பிழுத்த பல நிகழ்வுகள் நேரலையில் பார்க்க முடிந்தது. ஸ்டம்ப் மைக்கில் பதிவான அவர்களின் பேச்சுக்களும் இணையத்தில் வெளியானது. சம்பந்தப்பட்ட இருவரும் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை என கூறினாலும் ஏதேனும் தவறு நடக்காமல் இருக்க வேண்டுமே என்ற பதற்றம் இருந்தது.

நீ தற்காலிக கேப்டன்

நீ தற்காலிக கேப்டன்

இந்த நிலையில், கோலி டிம் பெய்ன்-ஐ பார்த்து, "நான் உலகிலேயே சிறந்த வீரர். நீ வெறும் தற்காலிக கேப்டன்" என கூறியதாக ஒரு செய்தி வலம் வந்தது. ஒரு அணியின் கேப்டன் இப்படி மோசமாக மற்றவரை அவமானப்படுத்தும் வகையில் பேசினாரா? என அதிர்ச்சியாக இருந்தது இந்த செய்தி.

பிசிசிஐ மறுப்பு கூறியது

பிசிசிஐ மறுப்பு கூறியது

மற்ற செய்திகளுக்கு ஸ்டம்ப் மைக் பேச்சு ஆதாரமாக இருக்கும் நிலையில், இந்த பேச்சுக்கு அப்படி எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் பிசிசிஐ இந்த செய்தியை மறுத்துள்ளது. இதை கோலி சொல்லவே இல்லை. யாரோ சும்மா ரீல் சுத்தி இருக்கிறார்கள் எனக் கூறி இந்த செய்தியை மறுத்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதை அப்படி எடுத்துக் கொள்ளுமா?

கோலி அமைதியாக இருக்க வேண்டும்

கோலி அமைதியாக இருக்க வேண்டும்

இப்போது வரை மோசமான நிகழ்வுகள் எதுவும் நிகழவில்லை. ஆனால், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதற்குள் வேறு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். கோலி முதலில் தான் ஒரு அணியின் கேப்டன் என்பதை உணர வேண்டும். களத்தில் திறமையை காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

Story first published: Wednesday, December 19, 2018, 17:45 [IST]
Other articles published on Dec 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+