Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பையில் ஆடுவது கனவு தானா? எல்லாம் ரிஷப் பண்ட் கையில் தான் இருக்கு!

மும்பை : இந்திய உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடிப்பாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடருடன் ஒருநாள் அணியில் இடம் பிடிக்க மாட்டார் என கூறப்பட்டது. எனினும், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றார்.

கதை முடிந்தது

கதை முடிந்தது

அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவ்வளவு தான் இனி தினேஷ் கார்த்திக் கதை முடிந்தது. அவரது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வாய்ப்பை ரிஷப் பண்ட் எடுத்துக் கொண்டார் என பேசப்பட்டது.

மாற்றி மாற்றி வாய்ப்பு

மாற்றி மாற்றி வாய்ப்பு

ஆனால். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு பெற்றார் தினேஷ் கார்த்திக். இந்த தொடர்களில் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவது உறுதி என கூறப்பட்டது.

உத்தேச அணியில் இல்லை

உத்தேச அணியில் இல்லை

எனினும், அதன் பின் இப்போது இந்தியாவின் நடைபெறும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணி தான் உலகக்கோப்பை உத்தேச அணி என கூறப்பட்டு வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் அந்த அணியில் வாய்ப்பை இழந்துள்ளார்.

கடந்த ஆண்டில் தினேஷ்

கடந்த ஆண்டில் தினேஷ்

தற்போது தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் இடம் பெறமாட்டார் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. உண்மையில், தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஆடிய போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளில் பலமுறை தன்னை நிரூபித்தார். எனினும், அது எதுவுமே பெரிய எண்களாக இல்லை.

கண்டு கொள்ளப்படவில்லை

கண்டு கொள்ளப்படவில்லை

மிடில் ஆர்டரில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே ஆடும் வாய்ப்பு பெற்ற தினேஷ் அதில் சிறப்பாக ஆடியும் அது அரைசதம், சதமாக இல்லை என்பதால் தற்போது கண்டு கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. தேர்வுக் குழுவின் கருத்து உலகக்கோப்பை அணியில் இடம் பெற ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இடையே போட்டி உள்ளது என்பதே.

ரிஷப் பண்ட் நிரூபிக்கவில்லை

ரிஷப் பண்ட் நிரூபிக்கவில்லை

அப்படி பார்த்தால் ரிஷப் பண்ட்டும் தன்னை ஒருநாள் போட்டியில் நிரூபிக்கவில்லை. எனவே, உலகக்கோப்பை அணியில் இருவரில் யார் இடம் பெறப் போகிறார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

ஒருநாள் தொடரில் ரிஷப்

ஒருநாள் தொடரில் ரிஷப்

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் இடம் பெறவில்லை. ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார். ஒருவேளை ரிஷப் பண்ட் இந்த தொடரில் தன் பேட்டிங் திறனை நிரூபித்தால், தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு பெற மாட்டார்.

Story first published: Friday, March 1, 2019, 13:22 [IST]
Other articles published on Mar 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+