Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்டதை பிடித்த தினேஷ் கார்த்திக்.. மீண்டும் ஒருநாள் அணியில்.. உலகக்கோப்பையிலும் இடம் உறுதி?

Recommended Video

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு... திரும்பி வந்த தோனி !

மும்பை : இந்திய ஒருநாள் தொடருக்கான கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக், முஹம்மது ஷமி ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தினேஷுக்கு வாய்ப்பு

மீண்டும் தினேஷுக்கு வாய்ப்பு

தினேஷ் கார்த்திக், ஷமி, ஆகியோர் கடைசியாக இந்தியா ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. தினேஷ் கார்த்திக் இடம் பெறாத நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரிஷப் பண்ட் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

தினேஷ் கார்த்திக் உறுதி

தினேஷ் கார்த்திக் உறுதி

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், அணியில் ஒரு மூத்த வீரராகவும் தினேஷ் கார்த்திக் இடம் பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது.

அணியில் இடம் பிடித்த ஷமி

அணியில் இடம் பிடித்த ஷமி

முஹம்மது ஷமியை டெஸ்ட் பந்துவீச்சாளர் என முத்திரை குத்தும் அளவிற்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது தேர்வுக் குழு. இந்த நிலையில், ஷமி மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். ஷமி பந்துவீச்சில் பெருமளவிற்கு முதிர்ச்சி அடைந்துள்ளார் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

உலகக்கோப்பை அணியில் இடம்

உலகக்கோப்பை அணியில் இடம்

2019 உலகக்கோப்பைக்கு முன் கடைசியாக இந்தியா ஆடவுள்ள இரண்டு ஒருநாள் தொடர்கள் அணியில் தினேஷ் கார்த்திக், முஹம்மது ஷமி இடம் பிடித்ததன் மூலம் உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பண்டியா, ஜாதவ் உள்ளே

பண்டியா, ஜாதவ் உள்ளே

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த ஹர்திக் பண்டியா மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளார். அதே போல காயம் காரணமாக பல முறை உள்ளே, வெளியே ஆடி வந்த கேதார் ஜாதவ்வும் அணியில் இடம் பிடித்துள்ளார். முழு வீரர்கள் விவரம் கீழே...

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய ஒருநாள் அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, முஹம்மது ஷமி.

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது.

Story first published: Monday, December 24, 2018, 18:41 [IST]
Other articles published on Dec 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+