For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது அரசியல்.. முட்டாள்தனம்.. தினேஷ் கார்த்திக்கை ஏன் டீம்ல சேர்க்கலை? கொதித்து எழுந்த ரசிகர்கள்!

Recommended Video

தினேஷ் கார்த்திக்கை ஏன் டீம்ல சேர்க்கலை?.. கொதித்து எழுந்த ரசிகர்கள்!- வீடியோ

மும்பை : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படவில்லை. அதே சமயம் முந்தைய ஒருநாள் தொடர்களில் வாய்ப்பு பெறாத ராகுல், ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ட்விட்டரில் நேற்று பிசிசிஐ அணியை அறிவித்தது முதல் ரசிகர்கள் விமர்சனத்தை தொடங்கி விட்டனர்.

வெற்றியில் பெரும் பங்கு

வெற்றியில் பெரும் பங்கு

கடந்த ஓராண்டாக தினேஷ் கார்த்திக் அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்து வந்தார். எனினும், அவரை விடுத்து பார்மில் இல்லாத ராகுல் மற்றும் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்ததை ரசிகர்கள் விரும்பவில்லை. ரசிகர்களின் சில பதிவுகளை இங்கே காண்போம்.

முட்டாள்தனமான முடிவு

தினேஷ் கார்த்திக்கை நீக்கி விட்டு, ராகுலை சேர்த்தது முட்டாள்தனமான முடிவு. அணியில் சில தகுதியற்ற வீரர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.

அடித்து ஆடக் கூடியவர்

தினேஷ் கார்த்திக் எல்லா போட்டிகளிலும் ஆட வேண்டும். உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும். அவர் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடக் கூடியவர். அதை கடந்த வருடம் ஸ்ட்ரைக் ரேட் 200 வைத்திருந்தது மூலம் நிரூபித்து விட்டார்.

காரணம் கூற முடியுமா?

மறுபடியும் ராகுலா? அவர் மொத்தமாக பார்மில் இல்லை. தினேஷ் மேட்ச் வின்னராக இருக்கும் போது அவரை ஏன் நீக்கினீர்கள்? தினேஷ் நீக்கத்துகும், ராகுலை சேர்த்ததற்கும் காரணம் கூற முடியுமா? பிசிசிஐ ஒரு சார்புடையதாக உள்ளது.

சிறந்த ஃபினிஷர் இவர் தான்

இந்த தேர்வை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. தினேஷ் கார்த்திக் அற்புதமாக ஆடுகிறார். ராகுல் மற்றும் பண்ட்-க்காக அவரை அணியில் இருந்து நீக்க எந்த காரணமும் இல்லை. இந்தியாவுக்கு தேவையான சிறந்த ஃபினிஷர் இவர் தான்.

அரசியல் மற்றும் பாகுபாடு

பிசிசிஐ, உங்கள் அரசியல் மற்றும் பாகுபாடு எல்லோருக்கும் தெரியும்படி அப்பட்டமாக உள்ளது. பண்ட்டுக்கு இந்திய ஆடுகளங்களில் வாய்ப்பு கொடுப்பது, தினேஷ் கார்த்திக்கை உலகக்கோப்பை அணியில் இருந்து மொத்தமாக வெளியேற்ற சிறந்த திட்டம். பள்ளிக்கூட பசங்களின் அரசியல்!

நிரூபித்து இருக்கிறார்

யாரிடம் போய் தினேஷ் கார்த்திக் அல்லது ராகுல்? என கேட்டாலும் எல்லோரும் தினேஷ் கார்த்திக் என்று தான் கூறுவார்கள். காரணம் கடந்த ஒரு வருடமாக அவர் தன்னை நிரூபித்து இருக்கிறார். ஆனால், பிசிசிஐ அவரை நீக்கி உள்ளது.

என்ன செய்தார்?

தினேஷ் கார்த்திக் எங்கே? அணியில் இருந்து நீக்கும் வகையில் அவர் என்ன செய்தார்? அவர் நம் ஃபினிஷர்.

இது ரொம்ப அநியாயம்

இது ரொம்ப அநியாயம். நம்ம கேப்டன் அவர் நண்பர் ராகுலை திரும்ப அழைத்துக் கொண்டார். தினேஷ் கார்த்திக்கை விட்டு விட்டார். தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அணிக்கு திரும்ப கொடுத்துள்ளார்.

தினேஷின் சராசரி 50

தினேஷ் கார்த்திக்கை நீக்க என்ன காரணம்? கடந்த ஒன்றரை ஆண்டில் தினேஷின் சராசரி 50. எந்த வகையில் ராகுல் - விஜய் ஷங்கர் அணியில் இருக்கிறார்கள்? மிக மோசமான அரசியல்!

Story first published: Saturday, February 16, 2019, 10:56 [IST]
Other articles published on Feb 16, 2019
English summary
India vs Australia : Fans slam BCCI for dropping Dinesh Karthik from ODI squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X