”பை-லேட்டரல் சீரிஸ்னா போதும்.. நல்லா சில்லு சில்லுனு நடப்பான் மேடம்” இந்தியாவை பொளக்கும் மீம்ஸ் இதோ!
ராய்ப்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20 போட்டியின் போது நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய 4வது டி20 போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாததால், மின் வாரியம் தரப்பில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்பின் நிர்வாகிகள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்தினர். இந்த செய்தி வெளியாகிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வந்தது. இதனை திமிரு படத்தில் வடிவேலு, அடவெக்கம் கெட்டவங்களா என்று சிங்கமுத்துவை வம்புக்கு இழுப்பார். அதுபோல் பிசிசிஐ நிர்வாகத்தை ரசிகர்கள் வெக்கம் கெட்டவங்களா என்று விமர்சிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதில் முதல் 18 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் 13 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை முதல் 18 ஓவர்களில் இந்திய அணி அந்தியன் படத்தின் ரெமோ போல் ஆடியதாகவும், கடைசி 2 ஓவர்களில் அம்பியை போல் விளையாடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதனை சொல்வதெல்லாம் உண்மை வீடியோவில் வருபவரை இந்திய அணி ரசிகராக மாற்றி, இந்திய அணி பார்த்து, "ஐசிசி நாக் அவுட்னா தாங்கி தாங்கி நடப்பான் மேடம்.. அதுவே பை லெட்டரஸ் சீரியஸ்னா சும்மா சில்லு சில்லுனு நடப்பாம் மேடம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

அதேபோல் இந்திய அணி 14வது முறையாக தொடர்ந்து டி20 தொடரை சொந்த மண்ணில் வென்று அசத்தியுள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு தான் சொந்த மண்ணில் இந்தியா டி20 தொடரை இழந்தது. இதனை எஸ்எம்எஸ் படத்தில் நடிகர் சத்யன் சந்தானத்தை பார்த்து மிரட்டும் போது, அய்யயோ பயமா இருக்கே.. என்று கூறுவார். அதுபோல் உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பின் பைலேட்டரலில் சாதித்ததை கிண்டல் செய்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.




Click it and Unblock the Notifications