அஸ்வின் கொடுத்த சிக்னல்.. உலகக்கோப்பை பைனல் முடிந்த உடன் ஓய்வு அறிவிப்பு?
சென்னை : இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் அஸ்வின் உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிந்த உடன் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகக்கோப்பையின் துவக்கத்தில் அஸ்வின் பேட்டி அளித்த போது இதுவே தனது கடைசி உலகக்கோப்பை எனக் கூறி இருந்தார். அப்போதே உலகக்கோப்பை முடிந்த உடன் அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அஸ்வினுக்கு தற்போது 37 வயது ஆகிறது. இந்திய டெஸ்ட் அணியில் அவர் முதன்மை ஸ்பின்னராக இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் நீண்ட காலமாக இடம் பெறாத அஸ்வின், திடீரென உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆடிய முதல் போட்டியில் மட்டுமே ஆடினார் அஸ்வின். அதன்பின் அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அதே சமயம், அவரது அனுபவத்தை மற்ற வீரர்களுக்கு பகிர்ந்து வந்தார். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் ஆலோசனைகள் கூறி வந்தார்.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காது. அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெறுவார். இந்த நிலையில், அவர் டெஸ்ட் அணியில் மட்டும் ஆடும் முடிவை எடுத்து. சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இந்தியா உலகக்கோப்பை வென்றால் அந்த வெற்றி மகிழ்ச்சியுடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. அதே சமயம், அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும் என்பதால் வெளிப்படையாக சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவிக்க மாட்டார் என்றும் ஒரு வாதம் கூறப்படுகிறது.
ஓய்வை அறிவிக்காவிட்டாலும், 2023 உலகக்கோப்பை ஸில் இந்திய வீரர்களுக்கு கடைசி உலகக்கோப்பைதான். ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அஸ்வின் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை. விராட் கோலி அடுத்த உலகக்கோப்பை வரை ஆட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications