Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த படத்தில் இடது பக்கம் நின்றால்.. உலகக்கோப்பை வெல்வது உறுதியா? உண்மை தெரியாமல் பகிரும் ரசிகர்கள்

அகமதாபாத் : உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா - ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் உலகக்கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.

கடந்த மூன்று உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளுக்கு முன் இதே போல எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டு இடது பக்கம் நிற்கும் கேப்டன் தான் கடந்த நான்கு முறையும் கோப்பை வென்று இருக்கிறார். அதே போல, இந்த முறையும் புகைப்படத்தில் இடது பக்கம் நிற்கும் ரோஹித் சர்மா தான் உலகக்கோப்பை வெல்லப் போகிறார் எனக் கூறி வருகின்றனர்.

INDIA vs AUSTRALIA FINAL 2023 : Rohit Sharma will win world cup as he pose from left side says fans

அதாவது, தற்போது எடுத்த புகைப்படத்தில் ரோஹித் சர்மா இடது புறமும், பாட் கம்மின்ஸ் வலது புறமும் நிற்கின்றனர். அதே போல, 2011இல் தோனி இடது புறமும், அப்போதைய இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா வலது புறமும் நின்று போஸ் கொடுத்து இருக்கின்றனர். அப்போது இடது பக்கம் நின்ற தோனி தான் கோப்பை வென்றார்.

அடுத்து 2015ஆம் ஆண்டு, இடது பக்கம் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், வலது பக்கம் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் நின்றனர். அப்போது இடது பக்கம் நின்ற மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக கோப்பை வென்று கொடுத்தார்.

அடுத்து 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் இடது பக்கமும், நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் வலது பக்கமும் நின்றனர். அப்போதும் இடது பக்கம் நின்ற இயான் மார்கன் அணி கோப்பை வென்றது.

அதே போல, 2023 உலகக்கோப்பையையும் இடது பக்கம் நிற்கும் ரோஹித் சர்மா தான் வெல்வார் எனக் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அந்த அணியின் கேப்டன் இடது பக்கமும், எதிரணி கேப்டன் வலது பக்கமும் நிற்பதே நடைமுறையாக உள்ளது.

அதன்படி 2011இல் இந்தியாவும், 2015இல் ஆஸ்திரேலியாவும், 2019இல் இங்கிலாந்தும் தங்கள் சொந்த மண்ணில் கோப்பை வென்றன. மற்றபடி புகைப்படத்தில் இடது பக்கம் நின்றதால் உலகக்கோப்பை வெல்லவில்லை என்பது தான் உண்மை. சொந்த மண்ணில் ஆடும் நிலையில், இந்திய அணியும் உலகக்கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, November 18, 2023, 21:36 [IST]
Other articles published on Nov 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+