Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அந்த முடிவு.. தோல்விக்கு காரணமே அதுதான்

அகமதாபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடையக் காரணமே இந்திய அணிக்கு எதிராக போன ஒரு முடிவு தான்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இரண்டாவது ஆடும் அணியே வெற்றி பெறும் என கூறப்பட்டது.

இந்த உலகக்கோப்பை தொடரிலும் இதற்கு முன் நடந்த நான்கு போட்டிகளில் மூன்று முறை சேஸிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே மைதானத்தில் ஆடிய போதும், இந்தியா சேஸிங் செய்தே வென்று இருந்தது.

INDIA vs AUSTRALIA FINAL 2023 : Toss is the main reason for India loss

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால், இந்தியா முதலில் பேட்டிங் செய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது பேட்டிங் செய்யவே ஆடுகளம் கடினமாக இருந்தது.

ஆனால், இரண்டாவதாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது ஓரளவு பவுண்டரி அடிக்க சாதகமாக சூழ்நிலைகள் மாறின. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து போராடி 240 ரன்கள் வரையே எடுத்தது. இந்தியா 270 - 280 ரன்கள் எடுத்து இருந்தால் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருக்க அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.

இந்தியாவின் விராட் கோலி, கே எல் ராகுல் எப்படி டெஸ்ட் போட்டி போல ஆடினார்களோ, அதே போலவே, ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுஷேன் டெஸ்ட் போட்டி போல 50 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். மறுபுறம் ட்ராவிஸ் ஹெட் அவ்வப்போது பவுண்டரி அடித்து இந்திய அணியிடம் இருந்து போட்டியை பறித்துச் சென்றார்.

ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட் 137 ரன்கள் குவித்தார். நிதான ஆட்டம் ஆடிய லாபுஷேன் 58 ரன்கள் குவித்தார். ஒருவேளை இந்தியா டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீசி இருக்கும். அப்போது இதே சம்பவங்கள் இந்தியாவிற்கு நடந்து இந்தியா வெற்றி பெற்று இருக்கும்.

Story first published: Sunday, November 19, 2023, 21:59 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+